News April 7, 2025
சென்னையில் மழைக்கு வாய்ப்பு

சென்னையில் இன்று (ஏப்ரல் 7) வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், தெற்கு வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்
Similar News
News April 8, 2025
சட்டக்கல்லூரி மாணவி மீது தாக்குதல்

அண்ணா சாலையில் நேற்று (ஏப்ரல் 7) தனியார் சட்டக்கல்லூரி மாணவியை தாக்கிய, சாந்தோம் டுமிங் குப்பத்தைச் சேர்ந்த ஆகாஷ் (22) என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர். மாணவியின் ஆண் நண்பரை ஆகாஷ் தினமும் பார்ட்டிக்கு அழைத்துச் செல்வது குறித்து மாணவி கேட்டபோது, தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் ஆகாஷ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
News April 8, 2025
டேபிள் பேனை இயக்கியபோது மின்சாரம் தாக்கி பலி

பட்டாளம் பகுதியை சேர்ந்த சூர்யா (11) என்ற சிறுவன், நேற்று (ஏப்ரல் 7) தனது வீட்டில் உள்ள டேபிள் பேனை இயக்கியுள்ளார். அப்போது, ஊக்கை கொண்டு டேபிள் பேனை இயக்க முயற்சித்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக சிறுவனை மின்சாரம் தாக்கியது. தூக்கி வீசப்பட்ட சிறுவனை, குடும்பத்தினர் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிறுவனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர்.
News April 7, 2025
சென்னை எம்.டி.சியில் வேலை வாய்ப்பு

சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் (MTC) சார்பில் இளம் பட்டதாரிகள், ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்களுக்கு அரசு விதிகளை பின்பற்றி தொழில் பழகுநர் பயிற்சி அளிக்கப்படுகிறது. என்ஜினியரிங், டிப்ளமோ, கலை மற்றும் அறிவியல் பாடப்பிரிவில் 2021 – 24ஆம் ஆண்டில் டிகிரி முடித்தவர்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க முடியும். <