News March 22, 2025

சென்னையில் பள்ளிகள் இயங்கும்

image

சென்னையில் உள்ள அனைத்து அரசு பள்ளிகள், அரசு உதவிப்பெறும் பள்ளிகள், ஆதிதிராவிடர் பள்ளிகள், தனியார் பள்ளிகளும் இன்று (மார்.22) இயங்கும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அதுவும், வெள்ளிக்கிழமை அட்டவணைப்படி பள்ளிகள் செயல்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே, பள்ளி மாணவர்கள் அனைவரும் விடுமுறை என்று நினைத்து வீட்டிலேயே தூங்கி விடாதீர்கள். மறக்காமல் மற்றவர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.

Similar News

News March 26, 2025

நீதி கேட்டு போராட்டம்: போலீசாருடன் தள்ளுமுள்ளு 2/2

image

பாலிடெக்னீக் கல்லூரி மாணவி புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்க கல்லூரி நிர்வாகம் மறுத்ததோடு, அந்த மாணவிக்கு ‘டீசி’ கொடுத்து அனுப்பியதாகக் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கேட்டு SFI மாணவர் சங்கத்தினர் நேற்று (மார்.25) கல்லூரி முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை காவல்துறையினர் தடுக்க முயன்றதால், இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.

News March 26, 2025

கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை 1/2

image

தரமணியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்த மாணவி, கடந்த வெள்ளிக்கிழமை தன்னுடன் படிக்கும் சக மாணவியுடன் ஆண் நண்பரைச் சந்திப்பதற்காக சென்றார். நீண்ட நேரத்துக்கு பிறகு ஒரு மாணவி மட்டும் கல்லூரி விடுதிக்கு திரும்பி உள்ளார். மற்றொரு மாணவி, ரத்த காயங்களுடன் மறுநாள் கல்லூரி விடுதிக்கு வந்துள்ளார். அப்போது, அந்த நண்பர் தனக்கு போதைபொருளை கொடுத்து, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிவித்தார்.

News March 26, 2025

கொள்ளையன் என்கவுண்டரில் உயிழப்பு

image

சென்னையில் 7 இடங்களில் செயின் பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையனை போலீசார் என்கவுண்டர் செய்தனர். கொள்ளையடித்த மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஜாபர் மற்றும் சூரஜ் ஆகியோரை போலீசார் விமான நிலையத்தில் கைது செய்தனர். நகைகளை பறிமுதல் செய்வதற்காக தரமணி காவல் நிலையம் அழைத்து செல்லும்போது, மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து ஜாபர் சுட முயன்றுள்ளார். அப்போது, தற்காப்புக்காக போலீசார் அவரை என்கவுண்டர் செய்தனர்.

error: Content is protected !!