News March 19, 2025
சென்னையில் தீரா நோய்களை தீர்க்கும் திருச்செந்தூர் முருகன்

சென்னை கே.கே நகரில் புகழ்பெற்ற ‘திருச்செந்தூர் முருகன் கோயில்’ உள்ளது. பொதுவாக திருச்செந்தூரில் உள்ள முருகன் கோயிலுக்கு செல்ல முடியாதவர்கள் கே.கே நகரில் அமைந்துள்ள இக்கோயிலுக்கு வந்து திருச்செந்தூர் முருகனை வணங்கி வழிபடுகின்றனர். இக்கோயிலுக்கு வந்து வழிபட்டால், தீராத நோய்களும் தீரும் என்றும், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்றும் பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. ஷேர் பண்ணுங்க.
Similar News
News March 20, 2025
சென்னை திரிசூலத்தில் சோழர் கால கோயில்

சென்னை திரிசூலத்தில், 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த சோழர் காலத்து திரிசூலநாதர் திருக்கோயில்கோயில் உள்ளது. இக்கோயில் தேவாரத்தில் வைப்புத்தலமாக பாடப்பட்டுள்ளது. மலைகள் சூழ்ந்த பகுதியில் அருள்பாலிப்பதால் திரிசூலநாதர் என்று அழைக்கப்படுகிறார். இங்கு வந்து வழிபட்டால் ராகு கேது தோஷங்கள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. தவிர பிணி, திருமணத்தடை நீங்க இங்கு வழிபடுகிரார்கள். ஷேர் பண்ணுங்க.
News March 20, 2025
சென்னை காவல்துறையில் மாற்றம்

தமிழ்நாடு அரசு மூன்று உயர்மட்ட ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. அதன்படி, சென்னை வடக்கு மண்டல சட்டம் ஒழுங்கு கூடுதல் காவல் ஆணையராக ப்ரவேஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.யாக லக்ஷ்மி, காவல்துறை தலைமையக ஐ.ஜி.யாக நரேந்திரன் நாயர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
News March 20, 2025
கள்ளச்சந்தையில் IPL டிக்கெட் விற்பனை

சென்னையில் நடைபெற உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் போட்டிக்கான ரூ.1,700 மதிப்பிலான டிக்கெட் ரூ.8,000 வரையிலும், ரூ.3,500 டிக்கெட் ரூ.18,000க்கும் கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். CSK – MI போட்டிக்கான டிக்கெட் விற்பனை 1 மணி நேரத்தில் விற்றுத்தீர்ந்தது. இதனால், பலரும் டிக்கெட்டுகளை வாங்கி கள்ளச்சந்தையில் விற்பதாக புகார் எழுந்துள்ளது.