News August 17, 2024
சென்னையில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை

சென்னை ராயப்பேட்டை பகுதியில் என்ஐஏ அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர். உலக நாடுகளால் தடை செய்யப்பட்ட ‘ஹிஸ்புத் தஹீரிர்’ அமைப்புக்கு ஆள் சேர்க்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சென்னையைச் சேர்ந்த 6 பேரை பயங்கரவாத தடை சட்டத்தில் சைபர் கிரைம் காவல் துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கு என்ஐஏக்கு மாற்றப்பட்டு விசாரணை நடக்கிறது. இது தொடர்பாக என்ஐஏ சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
Similar News
News August 5, 2025
சென்னையில் ரயில்வே வேலை… சூப்பர் வாய்ப்பு

இந்திய ரயில்வேயில் ஸ்டேசன் மாஸ்டர்- 5623, டிக்கெட் சூப்பர்வைசர்- 6235, ரயில் மேனேஜர்- 7367, அக்கவுண்ட் அசிஸ்டெண்ட்- 7520, கிளர்க்- 7367 என மொத்தம் 30,307 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு டிகிரி படித்திருந்தாலே போதும். ரூ.29,000 முதல் ரூ.35,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு வரும் 30ஆம் தேதிக்கு மேல்தான் இந்த <
News August 5, 2025
சென்னையில் வெளுத்து வாங்கிய மழை…

மன்னார் வளைகுடா மற்றும் அதனையொட்டிய தென்தமிழக கடலோர பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், சென்னையில் நேற்று (ஆகஸ்ட் 4) பரவலாக மழை பெய்தது. சென்ட்ரல், எழும்பூர், அமைந்தகரை, அரும்பாக்கம், கோயம்பேடு, வடபழனி, கிண்டி, போரூர், ஈக்காட்டுத்தாங்கல், அம்பத்தூர், ஆவடி, திருவேற்காடு, பூந்தமல்லி, திருமுல்லைவாயல், மாதவரம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. உங்க ஏரியாவில் மாலை பெய்ததா?
News August 5, 2025
சென்னையில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம்

சென்னையில் இன்று தண்டையார்பேட்டை, திரு.வி.க நகர், ஆலந்தூர், அடையாறு, ராயபுரம், தேனாம்பேட்டை பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ளது. முகாம் நடைபெறும் இடங்களின் முழுமையான விபரங்களை <