News October 28, 2024

சென்னை – வேடந்தாங்கல் பேருந்து சேவை வேண்டும்

image

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு ஏராளமானோர் வந்து செல்கின்றனர். ஆனால் அங்கு செல்வதற்கு போதிய பேருந்து வசதி இல்லை. குறிப்பாக, சென்னையில் இருந்து வேடந்தாங்கல் செல்ல போதிய பேருந்து வசதி இல்லாமல் உள்ளது. இதனால் வேடந்தாங்கல் வரும் பயணிகள் மிகவும் சிரமம் அடைகின்றனர். எனவே, சென்னையில் இருந்து வேடந்தாங்கலுக்கு செல்ல பேருந்து வசதி ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

Similar News

News November 20, 2024

பண்டிகைகளை முன்னிட்டு ரயில் சேவை நீட்டிப்பு

image

கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகைகளை முன்னிட்டு, 10 சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும் நாகர்கோவில் – தாம்பரம் சிறப்பு ரயில் பிப்.2ஆம் தேதி வரையிலும், வியாழக்கிழமைகளில் இயக்கப்படும் நெல்லை – சென்னை எழும்பூர் ரயில் சேவை பிப்.6ஆம் தேதி வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க

News November 20, 2024

ரயில் சேவையில் மாற்றம்: நோட் பண்ணிக்கோங்க

image

சென்னை எழும்பூர் – விழுப்புரம் மாவட்டத்தின் சிங்கப்பெருமாள் கோயில் – செங்கல்பட்டு ரயில்வே நிலையங்கள் இடையிலான பகுதிகளில் இன்று (நவ.20) முதல் நவ.23ஆம் தேதி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால், பிற்பகல் 1.10 மணி முதல் பிற்பகல் 4.10 மணி வரை சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து செங்கல்பட்டு செல்லும் ரயில்கள் சிங்கப்பெருமாள் கோயில் ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும். ஷேர் பண்ணுங்க

News November 20, 2024

விவசாயிகள் குறைதீர் கூட்டம்: ஆட்சியர் தகவல்

image

செங்கல்பட்டு மாவட்டத்தில், விவசாயிகள் குறைதீர் கூட்டம் கோட்ட அளவில் நடைபெற உள்ளது. வரும் 21ஆம் தேதி மதுராந்தகத்திலும், 22ஆம் தேதி செங்கல்பட்டிலும் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. காலை 11 மணிக்கு தொடங்கும் இந்தக் கூட்டங்களில் விவசாயிகள் மற்றும் விவசாய பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவித்து நிவாரணம் பெற்றுக்கொள்ளலாம் என ஆட்சியர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க