News April 4, 2025
சென்னை கலெக்டரிடம் ரூ.11 லட்சம் மோசடி; 3 பேர் கைது

சென்னை கலெக்டர் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.11.63 லட்சம் மோசடி செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கலெக்டரின் கையொப்பத்தை போலியாகப் போட்டு பணம் பறிக்கப்பட்டது. விசாரணையில் வருவாய் ஆய்வாளர்கள் பிரமோத், சுப்பிரமணி மற்றும் டிரைவர் தினேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ரூ.3 லட்சம் மதிப்பிலான சொத்துகள் பறிமுதல் செய்த போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News April 5, 2025
4 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை

முகப்பேர் பகுதியில், 4 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தையின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அருகிலுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகிறார்கள். குழந்தை பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், விரைவில் குற்றவாளி பிடிபடுவார் என உறுதியளித்தனர்.
News April 5, 2025
இன்சூரன்ஸ் வெரிஃபிகேஷன் ஆபிசர் வேலை

சென்னையில் உள்ள AYU ஹெல்த் அலைடு சர்வீசஸ் நிறுவனத்தில் இன்சூரன்ஸ் வெரிஃபிகேஷன் ஆபிசர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இளங்கலை படிப்பில் டிகிரி பெற்ற 21 – 50 வயதுடைய இளைஞர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளம் ரூ.15,000 வழங்கப்படும். முதல்முறையாக வேலை தேடுபவர்களும் இந்த <
News April 5, 2025
CSK-DC போட்டி: மெட்ரோவில் இலவசமாக பயணிக்கலாம்

சேப்பாக்கம் மைதானத்தில், CSK- DC அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி இன்று நடைபெறவுள்ளது. ரசிகா்களுக்கு தடையற்ற பயணத்தை வழங்கும் வகையில், போட்டிக்கான டிக்கெட்டில் இருக்கு QR கோடை மெட்ரோ ரயில் காண்பித்து பயணிக்கலாம். எந்த மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்தும், போட்டி நடைபெறும் மைதானத்துக்கு அருகிலுள்ள அரசினா் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையத்துக்கும் இடையே எவ்வித கட்டணமும் இன்றி பயணிக்கலாம். ஷேர் செய்யுங்கள்