News March 26, 2025

சென்ட்ரல் ஆவடி நள்ளிரவு மின்சார ரயில் ரத்து

image

பராமரிப்பு பணியின் காரணமாக சென்னை சென்ட்ரல் ஆவடி இடையே நள்ளிரவு இயங்கும் புறநகர் மின்சார ரயில் மார்ச் 26,27,28 தேதிகளில் ரத்து செய்யப்படவுள்ளது. ஆவடி ரயில் பணிமனையில் மார்ச் 26,27,28 தேதிகளில் நள்ளிரவு 12:30 மணி முதல் 3:30 மணி வரை பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால் அந்நாளில் சென்ட்ரலில் இருந்து 12:15க்கு ஆவடி செல்லும் புறநகர் மின்சார ரயில் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

Similar News

News March 31, 2025

JUST NOW: சென்னையில் இளைஞர் வெட்டி கொலை

image

சென்னை பெரவள்ளூரில் சந்துரு என்ற இளைஞர் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். தனது நண்பரோடு மது அருந்தி விட்டு வந்தவரை, ஆட்டோவில் வந்த இருவர் வழிமறித்து மறைத்து வைத்திருந்த கத்தியால் சந்துருவை சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பியோடியுள்ளனர். மேலும், கொலையில் தொடர்பு இருப்பதாக வினோத் உள்ளிட்ட இருவரை தேடி வருவதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 31, 2025

வீட்டில் செல்வம் பெருக செய்யும் அற்புத கோயில்

image

சென்னை வடதிருமுல்லைவாயலில் மாசிலாமணீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த தலத்தில் உள்ள நந்தி பகவானுக்கு பூஜை செய்து சாத்திய மாலையை அணிந்தால் திருமணத்தடை, புத்திரதோஷம் நீங்கும் என்பது ஐதீகம். மேலும், குடும்ப நலம், உடல் நலம், செல்வம் பெருக பக்தர்கள் இங்கு வந்து இறைவனை வழிபடுகின்றனர். மேலும், இந்த காரியம் அனைத்தும் நிறைவேறுவதாக பக்தர்கள் நம்புகின்றனர். பணப்பிரச்சனை உள்ள உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News March 31, 2025

வி.ஆர்.வணிக வளாகத்தில் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கத் தடை

image

சென்னை திருமங்கலத்தில் உள்ள பிரபல வி.ஆர்.வணிக வளாகத்தில் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கத் தடை விதித்து சென்னை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு ஒருங்கிணைந்த கட்டட விதிகளின்படி வணிக வளாகங்களில் போதுமான வாகன நிறுத்துமிட வசதி செய்து தர வேண்டியது அவசியம் எனக் கூறி, மனு தாக்கல் செய்தவருக்கும் ரூ.12,000 இழப்பீடாக வழங்கவும் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!