News March 22, 2025
செங்கல்பட்டு மின்சார ரயில்கள் பகுதி நேரமாக ரத்து

எழும்பூர் – விழுப்புரம் வழித்தடத்தில் உள்ள சிங்கப்பெருமாள் கோயில் – செங்கல்பட்டு ரயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணி நடைபெறகிறது. இதனால், இன்று (மார்.22) மின்சார ரயில்கள் பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது. செங்கல்பட்டில் இருந்து மதியம்1.45, 2.20 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரயில்கள் பகுதி நேரமாக செங்கல்பட்டு – சிங்கப்பெருமாள் கோவில் இடையே ரத்து செய்யப்படுகிறது.
Similar News
News March 25, 2025
துறைமுகத்தில் இன்டர்ன்ஷிப் மாணவிக்கு பாலியல் தொல்லை

சென்னை துறைமுகத்தில் கல்லூரி மாணவி ஒருவர் 30 நாட்கள் இன்டர்ன்ஷிப் சென்றுள்ளார். அங்கு துறைமுக போக்குவரத்து உதவி கண்காணிப்பாளர் சத்ய சீனிவாசன் என்பவர் மாணவிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மாணவியின் புகாரின் பேரில், சத்ய சீனிவாசன் மீது பாலியல் துன்புறுத்தல் மற்றும் பெண் வன்கொடுமை சட்ட பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News March 25, 2025
சென்னையில் ரூ.200 கோடியில் நடைபாதைகள்

சென்னை பெருநகரில் 170 கி.மீ. நீளத்திற்கு நடைபாதைகள் அமைக்கப்படும் என நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் மானியக்கோரிக்கையில் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். நாய்க்கடி பிரச்னைக்கு தீர்வு காணும்படி முதல்வர் அறிவுறுத்தி உள்ளதால், நாய்க்கடி பிரச்னைக்கு தீர்வு காண அனைத்து நகரங்களிலும் நாய் கருத்தடை மையம் அமைக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
News March 25, 2025
12,57,807 இறப்பு சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளன

சென்னை மாநகராட்சி இணையதளம் மூலம் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, 2022ஆம் ஆண்டில் 42,46,751 பிறப்பு சான்றிதழ், 15,82,041 இறப்பு சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளன. 2023ஆம் ஆண்டில் 46,04,976 பிறப்பு சான்றிதழ்களும், 14,92,284 இறப்பு சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளன. 2024ஆம் ஆண்டில் 43,01,961 பிறப்பு சான்றிதழ்களும், 12,57,807 இறப்பு சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளன.