News April 8, 2025
செங்கல்பட்டு: ஏப்.10ல் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில், வரும் ஏப்.10 அன்று மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் அதனுடன் இணைந்த பார்கள், FL2 ஹோட்டல்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் விற்பனை ஏதும் செய்யக்கூடாது, விதிகளை மீறி மதுபானம் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆட்சியர் அருண்ராஜ் எச்சரித்துள்ளார்.
Similar News
News May 8, 2025
செங்கல்பட்டு: வேலை தேடும் இளைஞர்களுக்கு

IDBI வங்கியில் ஜூனியர் அசிஸ்டண்ட் மேனேஜர் பதவிக்கான 676 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு டிகிரி முடித்திருந்தால் போதும். 21-25 வயதுடைய இருபாலரும் விண்ணப்பிக்கலாம். இதற்கு மாதம் ரூ.51,000 சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்கே https://www.idbibank.in/ கிளிக் செய்து 20.08.2025 வரை விண்ணப்பிக்கலாம். செம்ம வாய்ப்பு மிஸ் பண்ணிராதீங்க. வேலை தேடுவோருக்கு ஷேர் பண்ணுங்க.
News May 8, 2025
செங்கல்பட்டு +2 முடித்த மாணவர்கள் கவனத்திற்கு

+2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், தமிழ்நாடு அரசு கலை & அறிவியல் கல்லூரிகளில் 2025-26ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் மே 27 வரை விண்ணப்பிக்கலாம். B.A,B.Sc,BCA உள்ளிட்ட பல்வேறு பட்டப்படிப்புகளுக்கு கிளிக் https://www.tngasa.in/ செய்து விண்ணப்பிக்கலாம். கட்டணம்: பொதுப் பிரிவினருக்கு ரூ.50, SC/ST பிரிவினருக்கு ரூ.2. மதிப்பெண் அடிப்படையில் இடங்கள் ஒதுக்கப்படும். ஷேர் பண்ணுங்க.
News May 7, 2025
செங்கல்பட்டு இரவு நேரத்தில் ரோந்து பணி காவல் ஆய்வாளர்களின் விவரம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் இருந்து இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபடும் உதவி காவல் ஆய்வாளர்களின் இன்றைய (மே.1) பெயர் பட்டியல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. ஆபத்து நேரங்களில் மேலே கொடுக்கப்பட்டுள்ள எண்களை பொதுமக்கள் அழைக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. *இரவு தொழிற்சாலைகளுக்கு வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பகிரவும்*