News March 6, 2025
சுற்றுலாப் பயணிகளுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் நீலகிரிக்கு அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என்பதால் மேட்டுப்பாளையம்- உதகமண்டலம் இடையே சிறப்பு ரயில்கள் வரும் மார்ச் 28 முதல் ஜூலை 06 வரை வாரத்தில் வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமையில் மேட்டுப்பாளையத்தில் இருந்தும்,மறுமார்க்கத்தில், வாரத்தில் சனிக்கிழமை, திங்கள்கிழமையில் உதகமண்டலத்தில் இருந்தும் ரயில் புறப்படும் என சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.
Similar News
News March 6, 2025
சேலம் வழியாக ஹோலி சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

ஹோலி பண்டிகையை முன்னிட்டு சேலம் வழியாக வரும் மார்ச் 07, 14 தேதிகளில் திருவனந்தபுரம் வடக்கில் இருந்து ஹஸ்ரத் நிஜாமுதீனுக்கும், மறுமார்க்கத்தில், மார்ச் 10, 17 தேதிகளில் ஹஸ்ரத் நிஜாமுதீனில் இருந்து திருவனந்தபுரம் வடக்கிற்கும் சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரயில்கள் சேலம் ரயில் நிலையத்தில் 3 நிமிடங்கள் நின்றுச் செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News March 6, 2025
சேலத்தில் 2-வது நாளாக சதமடித்த வெயில்!

சேலம் மாவட்டத்தில் இரண்டாவது நாளாக இன்று (மார்ச் 06) 100.1 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. கடும் வெயில் சுட்டெரித்து வருவதால் பொதுமக்கள் கடும் சிரமமடைந்தனர். பகல் நேரத்தில் சாலைகளில் ஆள் நடமாட்டம் குறைந்த அளவில் காணப்பட்டது. சேலம் மாவட்டத்தில் நேற்று 100.6 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
News March 6, 2025
சேலம் மத்திய சிறையில் கிளியை வளர்த்த கைதி

கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சேலம் மத்திய சிறையில் இருக்கும் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த சீவலப்பேரியன் (30) என்பவர், தனது அறையில் கிளி ஒன்றை வளர்த்து வருவதாக கிடைத்த தகவலின் படி, வார்டர் மாயவன் கிளியை பிடித்து பறக்க விட்டுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கைதி வார்டரை தாக்கியுள்ளார். இதுகுறித்து சிறைத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.