News March 17, 2025
சிவபெருமானுக்கு ட்ரோன் மூலம் பாலபிஷேகம்

காஞ்சிபுரம் வண்டார் குழலி சமேத தான்தோன்றீஸ்வரர் கோவிலின் நுழைவாயிலில் 16 அடி மண்டபத்தின் மேல், 21 அடி உயரத்தில் சிவபெருமான் ஒற்றை காலில் உள்ள சிலை வர்ணம் பூசப்பட்டு புதுப்பொலிவு பெற்றது. இதைத் தொடர்ந்து நேற்று காலை சிவபெருமான் சிலைக்கு, ட்ரோனில், 21 லிட்டர் பால் நிரப்பி அதன் வாயிலாக பாலாபிஷேகம் செய்தனர். இந்நிகழ்வில் கலந்துகொண்ட ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
Similar News
News March 18, 2025
விவசாயிகளின் நலன் காக்கும் நாள் கூட்டம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மார்ச் 2025 மாதத்திற்கான, விவசாயிகளின் நலன் காக்கும் நாள் கூட்டம் 21.03.2025 அன்று காலை 10.30 மணிக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு கூட்டரங்கில் நடைபெற உள்ளது. எனவே மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
News March 18, 2025
சாலை விபத்தில் அடகு கடை உரிமையாளர் மனைவி பலி

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம், ஓ.எம். மங்கலத்தைச் சேர்ந்தவர் கேசாராம், அடகு கடை வைத்துள்ளார். இவரது மனைவி சுந்தரி தேவி, இவர், நேற்று முன்தினம் மாலை, உறவினர் மகன் மனிஷ், என்பருடன் ஸ்கூட்டரில், வீட்டில் இருந்து அடகு கடைக்கு சென்றார். தக்கோலம் சாலையில் சென்ற போது, கார், ஸ்கூட்டரின் பின்னால் மோதியது. இதில் சுந்தரி தேவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மனிஷ் சிகிச்சை பெற்று வருகிறார்.
News March 17, 2025
நோய் விலகி நலம் தரும் அற்புத கோவில்

காஞ்சிபுரம் மாவட்டம் திருநீர்மலை பகுதியில் பிரசித்தி பெற்ற நீர்வண்ணர், ரங்கநாதர், உலகளந்த பெருமாள், பால நரசிம்மர் கோவில் உள்ளது. இங்குள்ள குளத்தில் நீராடி வழிபட்டால் நோய் விலகி நலம் உண்டாகும். குழந்தை இல்லாதவர்கள் இங்குள்ள மரத்தில் தொட்டில் கட்டி வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.