News March 6, 2025
சிவன்மலை முருகன் கோயில் சிறப்புகள்

சிவன் திரிபுரத்தை அழிக்க, மேருமலையை வில்லாகப் பயன்படுத்தியபோது, அதிலிருந்து சிதறிய ஒரு சிறுபகுதியே சிவன்மலை எனப்படுகிறது. பார்வதி, அகத்தியர் சிவனை நோக்கித் தவம் செய்த தலம் என்றும், வள்ளியை மணம்முடித்த முருகன் வள்ளியுடன் இங்கு வந்து குடிகொண்டாரம். திருநள்ளாறு சென்று சனீஸ்வரனை தரிசிப்பதும், சூரிய நாராயணர் கோவில் சென்று சூரியனை வழிபடுவதால் ஏற்படும் சிறப்பும், சிவன்மலை முருகனை வழிபட்டால் கிடைக்கும்.
Similar News
News March 6, 2025
திருப்பூர் மாவட்டத்தில் பொது விநியோகத்திட்ட சிறப்பு முகாம்

திருப்பூர் மாவட்டத்தில் பொதுவினியோக திட்ட சிறப்பு குறைதீர்ப்பு முகாம் வரும் 8ம் தேதி காலை 10 மணி முதல் 1 மணி வரை நடைபெறுகிறது. இந்த முகாமில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து குடிமைப்பொருள் தனி தாசில்தார்கள், வட்ட வழங்கல் அதிகாரிகள் மற்றும் தனி வருவாய் ஆய்வாளர்கள் கலந்துகொண்டு முகாமில் பெறப்படும் மனுக்களுக்கு தீர்வு காண உள்ளார்கள் என கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.
News March 6, 2025
திருப்பூர் தொழிலதிபரிடம் 41 லட்சம் மோசடி

திருப்பூர் மங்கலம் சாலையை சேர்ந்த தொழிலதிபரிடம் கடந்த 18ஆம் தேதி வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொண்ட ஒருவர் பங்குச்சந்தை வர்த்தகம் குறித்து கூறி அதில் பணத்தை முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என்று கூறி லிங்க் ஒன்றை அனுப்பி உள்ளார். இதில் இணைந்த தொழிலதிபர் 41 லட்சத்தை முதலீடு செய்துள்ளார். எதிர்பார்த்த பணம் கிடைக்காததால் தான் ஏமாற்றப்பட்டது அறிந்து சைபர் குற்றப்பிரிவு போலீசிடம் புகார் அளித்துள்ளார்.
News March 6, 2025
திருப்பூரில் வேலைவாய்ப்பு முகாம்

திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலம் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 7ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1.30 மணி வரை நடைபெறவுள்ளது. இது கலெக்டர் அலுவலக வளாகம், 4வது தளத்தில் அறை எண்: 439ல் மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் நடைக்கவுள்ளது என கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார். (Share பண்ணுங்க)