News March 19, 2025

சிவனின் தோஷத்தை நீக்கிய ஸ்தலம் தெரியுமா?

image

பிரம்மனுக்கு ஏற்பட்ட கர்வத்தினால் சிவபெருமான் அவர் தலையை கொய்தார். அதனால் சிவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. அந்த தோஷத்தை நீக்கிய ஸ்தலம் தான் திருவையாறு அருகே உள்ள கண்டியூர் ஹரசாப விமோசன பெருமாள் கோயில். இத்தலத்தில் சிவனின் தோஷத்தை நீக்கியதால் இங்குள்ள பெருமாளுக்கு ஹரசாப விமோசன பெருமாள் என அழைக்கப்படுகிறார். இது சுமார் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயிலாக கருதப்படுகிறது. அறிய SHARE செய்யவும்

Similar News

News March 19, 2025

பிளஸ் டூ மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை தேர்வு

image

ஸ்கில் இந்தியன் மற்றும் தமிழ்நாடு கல்வி உதவி மையம்(Tnedusupport) இணைந்து நடத்தும் +2 மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை தேர்வு ஆன்லைன் மற்றும் நேரடி முறையில் நடைபெற உள்ளது. இந்த தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசு ₹25,000, இரண்டாம் பரிசு ₹15,000, மூன்றாம் பரிசு ₹10,000 மேலும் 1000 மாணவர்களுக்கு ஆறுதல் பரிசு, அரசுப்பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட உள்ளது.

News March 19, 2025

இந்திய கடற்படையில் வேலை, ரூ.81,100 வரை ஊதியம்

image

இந்திய கடற்படையில் 327 குரூப் C பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதில் லஸ்கர்களின் சிராங் – 57, லஸ்கார்‌- I – 192, தீயணைப்பாளர் – 73, டோப்பஸ்‌ – 5 என நிரப்பபடவுள்ளது. இதற்கான மாத ஊதியம் ரூ. 25,500 முதல் ரூ. 81,100 வரை வழங்கப்படும் என அறிவித்துள்ளது. விண்ணப்பிக்க கடைசி நாள் ஏப்ரல் 1. இதுகுறித்து மேலும் அறிய <>இங்கு க்ளிக்<<>> செய்யவும். நண்பர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.

News March 18, 2025

சோழர்களின் குலதெய்வம் தெரியுமா?

image

பிற்காலச் சோழப் பேரரசை நிறுவிய விஜயாலயன், தன் குலம் தழைக்கத் தஞ்சாவூரில் நிசும்பசூதனி எனும் தேவியை பிரதிஷ்டை செய்தார். தற்போது, நிசும்பசூதனி தேவி, தஞ்சாவூர் கீழவாசல் பகுதியில் வடபத்ரகாளி கோயிலில் தன்னை நாடி வருபவர்களுக்கு அருள்பாலிக்கிறார். சுமார் 7 அடி உயரமுள்ள நிசும்பசூதனியின் திருமேனி எட்டுக் கரங்களோடு காணப்படுகிறது. ஒருமுறை இங்கு சென்று வாருங்கள்..தெரியாதவர்களுக்கு SHARE செய்யவும்

error: Content is protected !!