News November 13, 2024
சிவகாசியில் அமையவுள்ள மாநாட்டு அரங்க மாதிரி வெளியீடு
தொழில் நகரமான சிவகாசியில் தொழில்துறை உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் மாநகராட்சியில் அரசு சார்பாக ரூ.15 கோடி மதிப்பீட்டில் மாநாட்டு அரங்கம் அமைக்கப்படும் என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்தது மாநகராட்சி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 13,000 சதுர அடி அளவில் கட்டுவதற்காக இந்த மாநாட்டு அரங்கத்தின் மாதிரி புகைப்படம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
Similar News
News November 19, 2024
30 இடங்களில் கண் பரிசோதனை முகாம்
சிவகாசி அருகே செங்கமலநாச்சியார்புரம் ஊராட்சி நிர்வாகம் மற்றும் மனித வள மேம்பாட்டு நிறுவனம், விஷன் ஸ்பிரிங் இணைந்து நாளை (நவ.20) இலவச கண் பரிசோதனை மற்றும் இலவச கண் கண்ணாடி வழங்கும் முகாம் நடைபெற உள்ளது. பட்டாசு தொழிலாளர்கள் வசிக்கும் 30 இடங்களில் நடைபெறும் முகாம்களில் பொதுமக்கள் பங்கேற்று பயனடையுமாறு ஊராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
News November 19, 2024
தமாகா சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம்
சிவகாசி சட்டமன்ற தொகுதியில் தமாகா சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் இன்று நடைபெற்றது. பை பாஸ் சாலையில் நடந்த முகாமிற்கு, விருதுநகர் மத்திய மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் தலைவரும் பள்ளபட்டி ஊராட்சி மன்ற தலைவருமான ராஜபாண்டியன் தலைமை தாங்கி, உறுப்பினர் சேர்க்கை பணியை துவக்கி வைத்து, உறுப்பினர் படிவத்தை வழங்கினார். சட்டசபை தொகுதிக்கு 2000 உறுப்பினர்களை சேர்க்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தனர்.
News November 19, 2024
ராஜபாளையத்தில் 12ம் வகுப்பு மாணவன் தற்கொலை
ராஜபாளையம் ஆசிரியர் குடியிருப்பு பகுதி சேர்ந்த வெங்கடேஸ்வரி. இவரது மூத்த மகன் அஜய்ராம் தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு பயின்று வந்துள்ளார். இந்நிலையில், தனது தாய் வெங்கடேஸ்வரியிடம் தமிழ் கையேடு வாங்கி தர வலியுறுத்தியதாக தெரிகிறது. ஆனால் வாங்கி தராமல் தையல் வேலைக்கு சென்றுவிட்டதால் வீட்டில் இருந்த மாணவன் அஜய்ராம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.