News April 27, 2025
சிவகாசி : கிடா விருந்து நிகழ்வு ரத்து

விருதுநகர் மாவட்டம் அதிமுக சிவகாசி சட்டமன்ற தொகுதி சார்பாக கிரிக்கெட் வீரர்களுக்கு, அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி ஏற்பாட்டில் கிரிக்கெட் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழாவும் , கிடா விருந்து அளிக்கும் நிகழ்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுவதாக இருந்தது. இதனிடையே சிவகாசியில் பட்டாசு வெடி விபத்தால் நிகழ்ந்த உயிரிழப்பின் காரணமாக மே 4-க்கு விழா ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு.
Similar News
News April 27, 2025
விருதுநகர் மாவட்ட முக்கிய அரசு அலுவலக எண்கள்

விருதுநகர் மாவட்ட அளவிலான அலுவலக எண்கள்
▶️மாவட்ட மேலாளா் (டாஸ்மாக்) 04562-252660
▶️தணித்துணை ஆட்சியர் 04562-252742
▶️மாவட்ட சமூக நல அலுவலா் 04562-252397
▶️மாவட்ட மேலாளா் (தாட்கோ) 04562-252324
▶️மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் 04562-293613
▶️மாவட்ட பதிவாளா் (பதிவுத்துறை) 04562-243529
▶️மக்கள் தொடா்பு அலுவலா் 04562-252028
இதை உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க
News April 27, 2025
பாலியல் துன்புறுத்தல் குறித்து மாவட்ட அளவிலான விழிப்புணர்வு

விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியில் நேற்று பாலின சமத்துவம், பெண்களின் அதிகாரம் அளித்தல் மற்றும் பணியிடத்தில் பெண்கள் பாலியல் துன்புறுத்தல் குறித்து ஆட்சியர் ஜெயசீலன் தலைமையில் மாவட்ட அளவிலான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பவானி சுப்பராயன், புகழேந்தி ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர்.
News April 26, 2025
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்காக போட்டிகள் அறிவிப்பு

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மே.9 அன்று அனைத்து பள்ளி 11,12-ம் வகுப்பு மாணவர்களுக்கும், மே.10 அன்று கல்லூரி மாணவர்களுக்கான கட்டுரை, பேச்சுப்போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் கலந்து கொள்ளும் மாணவர்கள் தலைமை ஆசிரியர், கல்லூரி முதல்வரிடம் ஒப்புதல் பெற்று tamilvalar.vnr@tn.gov.in இல் மே.5 க்குள் பதிவு செய்ய வேண்டும். முதல் பரிசாக ரூ.10000 வழங்கப்படும்.