News April 26, 2025
சிவகங்கை மாவட்டத்தில் சத்துணவு உதவியாளர் பணி

சிவகங்கை மாவட்டத்தில் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 427 சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு நியமனம் செய்யப்படவுள்ளது, பணியாளர்களுக்கு ஓராண்டு கால பணிக்கு பின் சிறப்பு காலமுறை ஊதியத்தில் (ஊதிய நிலை 1 (Level of Pay – ரூ.3000-9000)) ஊதியம் வழங்கப்படும். இதற்கு 21 – 40 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணபிக்கலாம். விண்ணபிக்க இன்றே கடைசி நாள் (ஏப்ரல்.26) லிங்க் *ஷேர் பண்ணுங்க
Similar News
News April 26, 2025
நகரத்தார் குலதெய்வ வழிபாடு வரலாறு

காரைக்குடி, சிவகங்கை, கீழச்செவல்பட்டி சுற்றியுள்ள நகரத்தார் ஆண்டுதோறும் சித்திரை மாதம் இரண்டாவது செவ்வாய்க்கிழமை பாரம்பரிய முறைப்படி சீர்காழி அருகே உள்ள வைத்தீஸ்வரன் கோயிலில் குலதெய்வ வழிபாடு செய்வார்கள். அதற்காக 54 மாட்டு வண்டிகளில் நான்கு நாட்களுக்கு முன்பே ஒன்றன்பின் ஒன்றாக புறப்பட்டு சென்று வழிபட்டு திரும்பவும் மாட்டு வண்டியிலேயே தங்களது ஊர்களுக்கு வந்து சேர்வது வழக்கம்.
News April 26, 2025
சிவகங்கை: ஓட்டுநர்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு

சிவகங்கை மாவட்ட வேளாண்மை பொறியியல் துறையின் கீழ் 22 ஜேசிபி இயந்திரங்களை இயக்குவதற்கு, தகுதியுடைய, திறன் பெற்ற ஓட்டுநர்கள் தேவைப்படுகின்றனர். கனரக உரிமம், நல்ல உடல் தகுதி இருக்க வேண்டியது அவசியம். சிவகங்கை & காரைக்குடியில் உள்ள வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தினை தொடர்பு கொண்டு பயன் பெறலாம், அல்லது 9080230845 என்ற எண்ணை தொடர்பு கொண்டு பயன்படலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News April 26, 2025
போதையில் தலையில் கல்லை போட்டு கொன்ற இளைஞர்

இளையான்குடி அருகே விவசாயி சிவசாமி(45) & தங்கச்சாமி(26). இவர்கள் இருவரும் கடந்த புதன்கிழமை ஒன்றாக அமர்ந்து மது குடித்தனர். அப்போது, இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதையடுத்து, தூங்கி கொண்டிருந்த சிவசாமியின் தலை மீது தங்கச்சாமி பெரிய கல்லை போட்டார். இதில் படுகாயமடைந்த அவர் சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, (வியாழன்) உயிரிழந்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து தங்கச்சாமியை கைது செய்தனர்.