News April 24, 2025
சிவகங்கை பெயர் எப்படி வந்தது தெரியுமா?

சசிவர்ண தேவர் தனது குரு முனிவர் சாத்தப்பையா தியானம் செய்த இடத்திற்கு அருகிலிருந்த நீர் ஊற்றை விரிவுபடுத்தி அதை பெரிய அகலமான தெப்பகுளமாக உருவாக்கினார். அக்குளம் சிவனது கங்கை என்ற பெயரால் அழைக்கப்பட்டது. அக்குளம் பெயர் மருவி சிவகங்கை எனப் பெயர் பெற்றது. வேரு ஒரு கூற்றில், ஒரு செவ் வேங்கையை சசி வர்ணர் கொன்றதால் செவ் வேங்கை என்ற பெயர் சிவகங்கை என பெயர் வைக்கப்பட்டதாக ஒரு காரணம் உண்டு. Share IT.
Similar News
News April 29, 2025
சிவகங்கை மாவட்ட வட்டார வளர்ச்சி அலுவலர் எண்கள்

கல்வி, சுகாதாரம், மருத்துவம், வேளாண்மை போன்ற துறைகள் குறித்து வட்டார வளர்ச்சி அலுவலரிடம்(BDO) புகார் அளிக்கலாம்.
▶️காளையார்கோவில் -7402608357
▶️சிவகங்கை -7402608368
▶️மானாமதுரை -7402608358
▶️இளையான்குடி -7402608360
▶️திருப்புவனம் -7402608359
▶️தேவகோட்டை -7402608361
▶️கண்ணங்குடி -7402608362
▶️கல்லல் -7402608375
▶️சாக்கோட்டை -7402608364
▶️திருப்பத்தூர் -7402608365
*ஷேர் பண்ணுங்க
News April 29, 2025
சிவகங்கை: சிறப்பு வகுப்புகளில் பங்கேற்கலாம்

சிவகங்கை மாவட்டத்தில் 1ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களுக்கு பயனுள்ள வகையில், கோடை கொண்டாட்டம் நிகழ்ச்சிகள் வரும் மே 2ஆம் தேதி முதல் தொடங்கி மே.17ஆம் தேதி வரை சிவகங்கையில் உள்ள மருது பாண்டியர் நகர் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், காரைக்குடியில் உள்ள அழகப்பா மாதிரி பள்ளியிலும் சிறப்பு பயிற்சிகள் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார். *ஷேர் பண்ணுங்க
News April 28, 2025
விடுதிக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

சிவகங்கை மாவட்டத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் செயல்படும் விளையாட்டு விடுதிகளில் 2025-26 ஆம் ஆண்டிற்கான சேர்க்கைக்கு www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக விருப்பமுள்ள பள்ளி மாணவ/மாணவியர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் இன்று (ஏப்.28) தெரிவித்துள்ளார்.