News April 6, 2025

சிறுமியை கொலை செய்த காதலன் கைது

image

ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் சோமா கோபா (19). இவர், யாஷ்மதி போபோங் (16) என்ற சிறுமியுடன் குன்றத்துார் அருகே உள்ள நந்தம்பாக்கத்தில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தார். கடந்த மார்ச் 29ஆம் தேதி, சிறுமி யாஷ்மதி போபோங் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் விசாரணையில், தகராறில் சோமா கோபாதான் யாஷ்மதியின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, தற்கொலைபோல் நாடகமாடியது தெரிந்தது.

Similar News

News August 11, 2025

காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு மழை அலர்ட்

image

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நீடித்து வருவதால் தமிழகத்தில் 16ம் தேதி வரை மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதன்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (ஆக.11) பல்வேறு இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, காஞ்சிபுரம் மக்களே வெளியே செல்லும் போது குடையுடன் செல்லுங்கள். மேலும், SHARE பண்ணுங்க.

News August 11, 2025

காஞ்சிபுரம்: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (10.08.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100ஐ டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News August 10, 2025

காஞ்சிபுரம்: வங்கியில் வேலை.. ரூ.93,000 வரை சம்பளம்

image

பொதுத்துறை வங்கியான யூனியன் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு MBA, MMS, PGDBA, PGDBM முடித்தவர்கள் இங்கு <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு சம்பளம் ரூ.64,820 முதல் ரூ.93,960 வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க ஆகஸ்ட்.25ம் தேதி கடைசி ஆகும். நல்ல சம்பளத்தில் வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க.

error: Content is protected !!