News April 10, 2025
சிறுமியின் நிர்வாண படம் கேட்டு டார்ச்சர் – போக்சோவில் கைது

திருநெல்வேலி சிறுமி ஒருவரிடம் அவரது நிர்வாண படம் கேட்ட கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர். வள்ளியூர் கல்லூரி மாணவர் ஒருவர்14 வயது நெல்லை சிறுமியை காதலிப்பதாக கூறி செல் போனில் தொடர்பில் இருந்துள்ளார். இந்நிலையில் சிறுமியிடம் அவரது நிர்வாணப் படத்தை அனுப்பக் கோரி தொடர்ந்து தொல்லை கொடுத்தாராம். இதனை அடுத்து நேற்று (ஏப்9)சேரன்மகாதேவி போலீசார் கல்லூரி மாணவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
Similar News
News August 7, 2025
நெல்லையில் இன்று கைத்தறி தின கண்காட்சி

நெல்லை மாவட்ட கலெக்டர் சுகுமார் விடுத்துள்ள அறிக்கை: பதினோராவது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் நாளை 7ம் தேதி சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெறுகிறது. நெசவாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கபட உள்ளது. நெசவாளர் கூட்டுறவு சங்க கைத்தறி ஜவுளிகள் கண்காட்சி மற்றும் விற்பனைக்கு வைக்கப்படுவதால் பொதுமக்கள் பங்கேற்று பயனடையலாம் என தெரிவித்துள்ளார்.
News August 6, 2025
நாரணம்மாள்புரம் பகுதியில் குவாரிக்கு தடையில்லா சான்று

தமிழ்நாடு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம், திருநெல்வேலியைச் சேர்ந்த முகமது சலீம் பாதுஷாவுக்கு நாரணம்மாள்புரம் பகுதியில் ஸ்டோன் மற்றும் கிராவல் குவாரி நடத்துவதற்கு சுற்றுச்சூழல் தடையில்லா சான்று வழங்கியுள்ளது. மேலும் விவரங்களுக்கு https://parivesh.nic.in இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம் என மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் ஆணையம் தெரிவித்துள்ளது.
News August 6, 2025
சுர்ஜித், எஸ்ஐ சரவணனை காவலில் விசாரிக்க சிபிசிஐடி மனு

நெல்லையில் கவின் ஆணவப் படுகொலை வழக்கில் கைதான சுர்ஜித் மற்றும் எஸ்ஐ சரவணனை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் மனு தாக்கல் செய்தனர். டிஎஸ்பி ராஜ்குமார் மற்றும் இன்ஸ்பெக்டர் உலகராணி ஆகியோர் நெல்லை மாவட்ட 2-வது கூடுதல் மற்றும் அமர்வு தீண்டாமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் இன்று (06.08.2025) மனு தாக்கல் செய்தனர்.