News March 27, 2025
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் கைது

தஞ்சை அருகே 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் அஸ்லம்கான் என்ற 70 வயதுடைய முதியவர் போக்சோ சட்டப்பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டார். மேலும், வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த 8 வயது சிறுமிக்கு அஸ்லம்கான் பாலியல் தொல்லை அளித்ததாக அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News April 14, 2025
சரும பிரச்சனைகள் தீர்வு சொல்லும் புன்னைநல்லூர் மாரியம்மன்

புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில், சரும பிரச்சனைகளுக்கு நிவாரணம் தேடும் பக்தர்களால் பிரசித்தி பெற்றது. அம்மை, சிக்குன் குனியா, தோல் புண் போன்றவற்றில் இருந்து விடுபட வேண்டி இங்கு வருகிறார்கள். பக்தர்கள் இங்கு வந்து அனைத்து விதமான நோய்களிலிருந்தும் குணமடைய ஒரு வாரம் பிரார்த்தனைகளைச் செய்கிறார்கள். சரும பிரச்சனைகளை தீர்வு கூறும் நம் புன்னைநல்லூர் மாரியம்மன்.உங்க ப்ரெண்ட்ஸ்க்கு #SHARE பண்ணுங்க
News April 14, 2025
தஞ்சை: ரேஷன் கடை குறித்து புகார் அளிக்க சிறப்பு எண்!

தமிழகத்தில் பல திட்டங்கள் மக்கள் நன்மைக்காக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதிலொன்றுதான் மக்களுக்கு இலவசம் (ம) குறைந்த விலையில் ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம். ஆனால் சில காரணங்களால் மக்களுக்கு சரிவர பொருட்களை வழங்காமலும், கடையினை திறக்காமலும் ஊழியர்கள் செயல்படுவதாக புகார் எழுகிறது. இதுபோன்ற சம்பவம் உங்கள் பகுதியில் நடைபெறும் பட்சத்தில் 1800 425 5901 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம். SHARE பண்ணுங்க.
News April 14, 2025
தஞ்சையில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வரும் நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று மழை பொழிய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இன்று காலை 10 மணி வரை மாவட்டத்தில் மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவித்துள்ளது. வெளியில் செல்லும் மக்கள் குடையுடன் முன்னெச்செரிக்கையாக இருங்கள்!