News March 16, 2025

சிதம்பரம்: பைக் மீது கார் மோதி இளைஞர் உயிரிழப்பு

image

குறிஞ்சிப்பாடி மேல கொளக்குடியைச் சேர்ந்தவர் பார்த்திபன்(32). இவர் இன்று சிதம்பரம் அடுத்த வேலக்குடி பைபாஸ் மேம்பாலத்தில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த கார் ஒன்று எதிர்பாராமல் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் பார்த்திபன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சிதம்பரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News April 19, 2025

கடலூர்: கடலில் மூழ்கும் பிச்சாவரம்?

image

பிச்சாவரம் சதுப்புநிலக்காடுகள், மாங்குரோவ் காடுகள் மிகுந்துள்ள இந்த பகுதி தமிழக மட்டுமின்றி இந்தியாவின் மிக முக்கிய சுற்றுலாதலமாகும். கடலோர மாவட்டங்களில் எதிர்கொள்ளும் இயற்கை சீற்றங்கள் புயல், சுனாமி , கடல் அரிப்பு போன்றவற்றின் பாதிப்புகளை தடுத்து வருகிறது. கடல் மட்டம் உயர்வு காரணமாக 2100-க்குள் பிச்சாவரம் சதுப்புநிலங்களில் 413 ஹெக்டேரும் நீரில் மூழ்கிவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, Share It

News April 19, 2025

கடலூரில் உள்ள ஒரே குபேரர் கோயில் 

image

கடலூர் அருகே உள்ள சேந்திரக்கிள்ளை எனும் கிராமத்தில் ஒரு குபேரன் கோயில் உள்ளது. இக்கோயிலில் உள்ள மூலவர் சிலை சுமார் 60 ஆண்டுகளுக்கு முன் பூமியில் இருந்து எடுக்கப்பட்டது என்பதும், கடலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரே குபேரன் கோயில் இது மட்டுமே என்பதும் சிறப்பம்சமாகும். உங்களின் பணக்கஷ்டம் நீங்க இந்த கோயிலுக்குச் சென்று பாருங்கள். குபேரர் அருள் பெற மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க.. 

News April 18, 2025

கடலூர்: ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு?

image

இந்திய ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் (RRBs) சார்பில் தெற்கு ரயில்வேயில் காலியாக உள்ள 510 உதவி லோகோ பைலட் (ALP) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. டிப்ளமோ, பி.ஈ/பி.டெக் முடித்த 18 முதல் 30 வயதுக்குட்பட்ட நபர்கள் rrbchennai.gov.in என்ற இணையதளம் வாயிலாக இதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 11.05.2025. மத்திய அரசு வேலை தேடும் நபர்களுக்கு இதை ஷேர் செய்யவும்.

error: Content is protected !!