News April 20, 2025
சாலையோரம் காயங்களுடன் தவித்தவரை மீட்ட சமூக ஆர்வலர்

மயிலாடுதுறை கச்சேரி சாலையில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலக வாயிலில் நேற்று அடிபட்ட காயங்களுடன் ஒருவர் பல மணி நேரமாக அவதிப்பட்டு வந்தார். விசாரித்ததில் அவர் திருமணஞ்சேரியை சேர்ந்தவர் என தெரியவந்தது. தகவல் அறிந்த சமூக ஆர்வலர் அப்பர் சுந்தரம் மற்றும் சிலர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இவர்களது செயல் அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
Similar News
News May 8, 2025
மயிலாடுதுறை: விபத்தில் உயிரிழந்த மாணவன் தேர்ச்சி

சீர்காழி அருகே வானகிரி கிராமத்தை சேர்ந்த மாணவன் கபிலன் மேலையூர் தனியார் மேல்நிலைப் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு பயின்று வந்த நிலையில், கடந்த மார்ச் 30 ஆம் தேதி ஏற்பட்ட சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ள நிலையில், கபிலன் 343 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளார். இந்நிலையில் மாணவனின் பெற்றோர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
News May 8, 2025
மயிலாடுதுறை: வனத்துறையில் வேலை

தமிழக வனத்துறையில் காலியாக உள்ள 257 வனக் காவலர், வனக் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 18 முதல் 32 வயது வரை உள்ள, 10th, 12th முடித்தவர்கள் <
News May 8, 2025
மயிலாடுதுறை: சீர்காழி மாணவி முதலிடம்

பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில், மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி உள்ள தனியார் பள்ளி மாணவி ஜெஸ்மியா 597 மதிப்பெண்கள் பெற்று மாவட்டத்தில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். அதே பள்ளியில் பயிலும் மாணவி மதுஷா 596 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடம் பிடித்துள்ளார். சாதனை புரிந்துள்ள மாணவிகளுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.