News April 4, 2024
சாதனை சிறார்களுக்கு எஸ்பி பாராட்டு

கடலில் கலக்கும் பிளாஸ்டிக் கழிவுகளால் சுற்றுச்சூழல் மாசுபடுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இலங்கை தலைமன்னார் முதல் தனுஷ்கோடி வரை 30 கிமீ தூரத்தை 9 வயது சிறுமி தாரகை ஆராதனா, 7 வயது சிறுவன் நிஷ்விக் ஆகியோர் இடைவிடாமல் நீந்திக் கடந்தனர். சாதனை புரிந்த இருவரையும் ராமநாதபுரம் எஸ்பி சந்தீஷ் இன்று பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.
Similar News
News April 16, 2025
இராம்நாடு பொதுமக்களுக்கு பேரிடர் மேலாண்மை துறை சார்பில் அறிவிப்பு

இராமநாதபுரம் மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில் வெப்ப அலை குறித்த உள்ளூர் வானிலை செய்திகளை, செய்திதாள், வானொலி தொலைக்காட்சிகள், TN ALERT செயலி மூலம் தெரிந்து கொண்டு அன்றைய பணிகளை திட்டமிடுமாறும், வீட்டிலிருந்து வெளியே செல்வது மிக அவசியமாக இருப்பின் நண்பகல் 12 மணிமுதல் மாலை 3 மணிவரை வெளியே செல்வதை தவிர்க்கும் மாறும் காலை மாலை செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. *ஷேர் பண்ணுங்க
News April 16, 2025
ராமநாதபுரத்தில் 2.30மணி வரை மழைக்கு வாய்ப்பு

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடதமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று மதியம் 2.30 மணி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஷேர்
News April 16, 2025
இராமநாதபுரத்தில் ரூ.6.43 கோடியில் புதிய திட்டம் தொடக்கம்

இந்தியாவில் முக்கிய நகரங்கள் இடையே வணிகம், சுற்றுலா ரீதியாக நீர்வழி போக்குவரத்தை துவக்கி மத்திய அரசு சாகர்மாலா எனும் திட்டத்தை அமல்படுத்தியது. அதன்படி ராமேஸ்வரத்தில் சுற்றுலா படகு சவாரி துவக்குவதற்கான தமிழ்நாடு கடல்சார் வாரியம் ஆய்வு செய்து அக்னி தீர்த்தம் கடற்கரையில் முதற்கட்டமாக ரூ.6.43 கோடி செலவில் 120 மீட்டர் தூரத்திற்கு ஜெட்டி பாலம் தூண்கள் அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. *ஷேர் பண்ணுங்க