News March 30, 2024
சலூன் கடைக்காரர் குத்திக் கொலை

தூத்துக்குடி முத்தையாபுரத்தில் சலூன் கடை நடத்தி வருபவர் ஆண்டியப்பன். இவருக்கு மகேஷ் என்பவரின் மனைவியுடன் தொடர்பு இருந்ததால் மகேஷ் கடந்த 2018 ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதில் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக மகேஷின் அண்ணன் குமாரசாமி நேற்று இரவு ஆண்டியப்பனை கத்தியால் குத்தியுள்ளார் .இதில் காயமடைந்த ஆண்டியப்பன் இன்று காலை மருத்துவமனையில் உயிரிழந்தாா்.
Similar News
News April 14, 2025
தூத்துக்குடிக்கு எஸ்ஐ ஆயுதப் படைக்கு மாற்றம்

தூத்துக்குடியை சேர்ந்த வாலிபரை தென்பாகம் எஸ்ஐ முத்தமிழ் அரசன் தாக்கியதாகவும், அதனால் வாலிபருக்கு கை எலும்பு முறிவு ஏற்பட்டு, அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டதாகவும் புகார் எழுந்தது. இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது .இதைத் தொடர்ந்து சப் இன்ஸ்பெக்டர் முத்தமிழ் அரசனை மீண்டும் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் உத்தரவிட்டுள்ளார்.
News April 14, 2025
முதல்வர் படைப்பகம் இடம் தேர்வு

தமிழகத்தில் போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு வசதியாக முதல்வர் படைப்பகம் 30 இடங்களில் அமைக்க நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் முதல்வர் படைப்பகம் அமைக்கும் இடத்திற்கான இடத்தை தேர்வு செய்யும் பணியில் இன்று மாநகராட்சி மேயர் ஜெகன் மாநகராட்சி ஆணையர் மதுபாலன் ஆகியோர் ஈடுபட்டனர்.
News April 14, 2025
மாற்றுத் திறனாளிகள் ஏப்ரல் 30க்குள் அனுப்ப வேண்டும்

தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் மாற்றுத்திறனாளிகள் தங்கள் பிரச்சனைகள் குறித்த மனுக்களை மாநில ஆணையத்திற்கு தபால் அல்லது மின்னஞ்சல் மூலமாக ஏப்ரல் 30க்குள் அனுப்பி வைக்கலாம். முன் கூட்டியே பெறப்பட்ட மனுக்கள் மீது திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவகத்தில் வைத்து மே 29,30 ஆகிய தேதிகளில் சுற்று நீதிமன்றம் நடைபெற உள்ளது. மனுக்கள் தாக்கல் செய்வது குறித்த தகவல்களுக்கு 9499933236 என்ற எண்ணில் அழைக்கலாம்.