News March 31, 2025

சமையல் எரிவாயு டேங்கர் லாரிகள் இயங்குகின்றன

image

ஆயில் நிறுவனங்கள் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்திருப்பதை கண்டித்து சமையல் எரிவாயு டேங்கர் லாரிகள் கடந்த 27ஆம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டன. இதன் காரணமாக தூத்துக்குடியில் ஏராளமான டேங்கர் லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டதால் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில் வேலை நிறுத்தம் நேற்று இரவு விலக்கிக் கொள்ளப்பட்டதை அடுத்து இன்று டேங்கர் லாரிகள் வழக்கம் போல் இயங்கின.

Similar News

News April 3, 2025

தூத்துக்குடி இரவு ரோந்து விவரம்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் குற்ற செயல்கள் நடைபெற்று விடாமல் தடுக்கும் வகையில் மாவட்ட முழுவதும் காவல்துறையினர் இரவு நேரங்களில் பொதுமக்கள் நலன் கருதி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று இரவு மாவட்ட முழுவதும் ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விபரங்களை கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.

News April 3, 2025

தூத்துக்குடியில் இன்று முதல் கனமழைக்கு வாய்ப்பு

image

தென்னிந்திய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் ஒர் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக இன்றும், நாளையும்(ஏப்.3,4) தூத்துக்குடியில் மாவட்டத்தில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News April 3, 2025

சாத்தான்குளம் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

image

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் வழக்கறிஞர்கள் மற்றும் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதைத் தொடர்ந்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

error: Content is protected !!