News March 30, 2024

சமூக நீதி, சம நீதி என திமுக பேசுவதாக அண்ணாமலை காட்டம்

image

சமூக நீதி, சம நீதி என பேசும் திமுக அவர்களது குடும்பத்தை வளர்ப்பது, அவர்களது பிள்ளைகளை எம்.பி., எம்.எல்.ஏ. ஆக்குவது, அவர்களது உறவினர்களை அமைச்சர் ஆக்குவது, இது தான் அவர்களின் சமூக நீதி எனவும், திமுகவினர் வாக்கு சேகரிக்க செல்லும் இடங்களில் கருப்பு கொடி காட்டப்படுவதால் பயந்து பயந்து பிரசாரம் மேற்கொள்கின்றனர் என அண்ணாமலை இன்று பேசினார்.

Similar News

News April 11, 2025

வணிகர்களுக்கு ஆட்சியர் எச்சரிக்கை

image

நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள், உணவகங்கள், தொழிற்சாலைகள் மற்றும் பள்ளி கல்லூரிகளில் தமிழில் பெயர் பலகைகள் வைக்க வேண்டும். மே மாதம் 15ஆம் தேதிக்குள் தமிழில் பெயர் பலகை வைக்காதவர்கள் மீது அரசு விதிகளின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

News April 11, 2025

நாகை: ரேஷன் கார்டில் திருத்தம் செய்யணுமா?

image

நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களில் ரேஷன் அட்டை திருத்த முகாம் நாளை (ஏப்ரல் 12) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறவுள்ளது. ரேஷன் கார்டில் பெயர் நீக்கம், திருத்தம், சேர்த்தல், முகவரி மாற்றம், மொபைல் நம்பர் அப்டேட் போன்ற அப்டேட்களை இலவசமாக செய்து கொள்ளலாம் கட்டணம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்க உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க…

News April 11, 2025

அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பேருந்து பயணிகள்

image

தலைஞாயிறு ஒன்றியம் நாகப்பட்டினத்திலிருந்து இருந்து வேதாரண்யம் செல்லும் வழியில் தார் சாலை வெள்ளபள்ளம் அருகே சாலையில் சென்ற மினி சரக்கு வாகனம் ஒன்று எதிர்பாரா விதமாக திடீரென போஸ்ட் மரத்தில் மோதி எதிரில் வந்த அரசு பேருந்தின் முன்னால் நின்றுள்ளது. இதில் நல்வாய்ப்பாக பேருந்து பயணிகள் மற்றும் அந்த சரக்கு வாகனத்தின் ஓட்டுநரும் உயிர் தப்பித்தார். இது குறித்து போலீசார் தற்போது விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!