News April 6, 2025
சமயபுரம் மாரியம்மன் கோயில் யானைக்கு நினைவு மண்டபம்

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு சொந்தமாக சுபத்ரா யானை இருந்தது. திருவிழா காலங்களில் இந்த யானை பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் வயது முதிர்வு காரணமாக யானை இறந்து விட்டது. சட்டமன்ற அறிவிப்பின்படி கோயில் நிர்வாகம் யானைக்கு சுமார் ரூ.49.50 லட்சத்தில் நினைவு மண்டபம் கட்டப்படுகிறது. இதனை அறங்காவலர் குழுத்தலைவர் வி.எஸ்.பி.இளங்கோவன், கோயில் இணை ஆணையர் பிரகாஷ் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.
Similar News
News April 17, 2025
திருச்சி: புனித வெள்ளி சிறப்பு பேருந்துகள் இயக்கம்

கிறிஸ்தவர்களின் புனித வெள்ளியை முன்னிட்டு திருச்சியிலிருந்து நாகை, வேளாங்கண்ணி மற்றும் பல்வேறு நகரங்களுக்கு ஏப்.18, 19, 20 ஆகிய தேதிகளில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. குறிப்பாக திருச்சியிலிருந்து கோவை, திருப்பூா், மதுரை, காரைக்குடி, தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய ஊர்களுக்கு 175 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட உள்ளதாக திருச்சி மண்டல அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
News April 17, 2025
திருச்சி: ரூ.50,000 சம்பளத்தில் வேலை

திருச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் காலியாக உள்ள Agri Research Analyst பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஊதியம் ரூ.25,000 – 50,000 வரை வழங்கப்படுகிறது. இதற்கு பி.எஸ்சி., பட்டப்படிப்பு முடித்தவர்கள் <
News April 17, 2025
திருச்சி தபால் அலுவலகங்களில் சிறப்பு சலுகை

சித்திரை விழாவை முன்னிட்டு திருச்சி அஞ்சல் கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து தபால் அலுவலகங்களிலும், இந்திய அஞ்சல் துறை சர்வதேச விரைவு தபால் மற்றும் பார்சல் மூலமாக குறைந்த கட்டணத்தில் வெளிநாடுகளுக்கு பார்சல் அனுப்பும் சேவை சிறப்பு கவுண்டர்கள் மூலமாக ஏப்-30 வரை செயல்பட உள்ளது என்று திருச்சி அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். திருச்சி மக்களே இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.