News March 24, 2025
சனி தோஷம் தீர்க்கும் குச்சனூர் சனீஸ்வரர் கோவில்

சனி பகவான் மற்ற கோவில்களில் தனி சந்நிதியிலோ நவக்கிரகங்களிலோ இருக்கும் போது சனி மூலவராக உள்ள கோவிலாக குச்சனூர் சனீஸ்வரர் கோவில் திகழ்கிறது.இங்கு சனி லிங்க வடிவில் காணப்படுகிறார். திருநள்ளாறுக்கு அடுத்தபடியாக புகழ்பெற்ற இந்த கோவிலில் வழிபட்டால் சனி தோஷம் நீங்கி நன்மைகளை பெற முடியும்.சனி பகவானுக்கே ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்தை நீக்கிய தலம் என்ற பெருமையும் இதற்கு உண்டு.ஷேர் பண்ணுங்க
Similar News
News April 17, 2025
தேனி மாவட்ட இரவு ரோந்து காவலர்களின் விவரம்

தேனி மாவட்டத்தில் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரங்களை தினமும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மூலம் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி இன்று (ஏப்.17) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. பொதுமக்கள் இரவு நேரங்களில் ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால், இதில் குறிப்பிடப்பட்டுள்ள எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
News April 17, 2025
தேனி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விபரம்

தேனி மாவட்ட அணைகளின் (ஏப்ரல் 17) நீர்மட்டம்: வைகை அணை: 56.30 (71) அடி, வரத்து: 110 க.அடி, திறப்பு: 72 க.அடி, பெரியாறு அணை: 113.90 (142) அடி, வரத்து: 105 க.அடி, திறப்பு: 105 க.அடி, மஞ்சளார் அணை: 34.50 (57) அடி, வரத்து: இல்லை, திறப்பு: இல்லை, சோத்துப்பாறை அணை: 97.74 (126.28) அடி, வரத்து: 16.88 க.அடி, திறப்பு: 3 க.அடி, சண்முகா நதி அணை: 38.90 (52.55) அடி, வரத்து: 5 க.அடி, திறப்பு: இல்லை.
News April 17, 2025
போடி அருகே கார் மோதியதில் ஒருவர் உயிரிழப்பு

போடி அருகே ராசிங்காபுரம் பகுதியை சேர்ந்தவர் இளங்கோவன் (42). இவர் நேற்று (ஏப்.16) அப்பகுதியில் உள்ள சாலையின் ஓரமாக நடந்து சென்றுள்ளார். அப்பொழுது அவ்வழியாக கார் ஒன்று இளங்கோவன் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தார். விபத்து குறித்து போடி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.