News April 11, 2025
சத்துணவு மையத்தில் வேலை

கோவை மாவட்ட நிர்வாகம் நேற்று விடுத்த செய்தி குறிப்பில், மாவட்டத்தில் பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 331 சமையல் உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமிக்கப்பட உள்ளன. தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்படும் பணியாளர்களுக்கு ஓராண்டுக்கு பின் சிறப்பு காலமுறை ஊதியத்தில் ஊதியம் வழங்கப்படும். விண்ணப்பிக்க கடைசி நாள் ஏப்.28. அசல் சான்றுகளுடன் வர அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News August 8, 2025
கோவையில் நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம்

கோயமுத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நாளை (09.08.2025) உங்களுடன் ஸ்டாலின் முகாம், கோவை வடக்கு மண்டலம் (வார்டு எண் -3) மடாலயம், சின்னவேடம்பட்டி ஆகிய பகுதியில் நடைபெற உள்ளது என கோவை மாநகராட்சி ஆணையாளர் மா. சிவகுரு பிரபாகரன் இன்று தெரிவித்துள்ளார். மேலும் இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
News August 8, 2025
கோவை: பணம், தங்கத்துடன் இலவச திருமணம்!

கோவை மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் பல்வேறு கோயில்கள் உள்ளது. இக்கோயில்களில் சட்டப்பேரவை அறிவிப்பு (2025-26) எண் 1-ன் படி, ஏழை எளிய இந்து மக்கள் பயன்பெறும் வகையில் திருக்கோயில் மூலம் ரூ.70,000 (4 கிராம் தங்கம் ) திட்ட செலவில் திருமணம் நடத்தப்பட உள்ளது. இத்திட்டப்படி திருமணம் செய்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் உங்கள் அருகே உள்ள அரசு நிர்வாக கோயில் அலுவலகத்தை அணுகலாம். SHARE IT
News August 8, 2025
கோவை: உள்ளூரில் ரூ.50,000 சம்பளத்தில் வேலை!

கோவையில் செயல்பட்டு வரும், தனியார் நிறுவனத்தில் உள்ள Bussiness Development Executive பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாத ஊதியமாக ரூ.25,000 – ரூ.50,000 வரை வழங்கப்படும். முன் அனுபவம் தேவையில்லை. டிகிரி முடித்தவர்கள் <