News October 4, 2024
சதுரகிரி கோயிலில் நவராத்திரி விழா தொடக்கம்
வத்திராயிருப்பு மேற்குத் தொடர்ச்சி மலையில் சாப்டூர் வனச்சரகத்தில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் உள்ளது. இங்கு லிங்க வடிவில் அருள் பாலிக்கும் ஆனந்தவல்லி அம்மன் நவராத்திரி விழாவில் மட்டும் சதுரகிரி மலையில் உள்ள கொழு மண்டபத்தில் தினசரி பல்வேறு அலங்காரங்களில் கொலு வீட்டிருந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பது வழக்கம். இந்நிலையில் நேற்று அம்மனுக்கு காப்பு கட்டப்பட்டு நவராத்திரி விழா தொடங்கியது.
Similar News
News November 20, 2024
மாவட்டத்தில் 79.40 மில்லி மீட்டர் மழை பதிவு
விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 79.40 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. குறிப்பாக சிவகாசியில் 10 மில்லி மீட்டர் மழையும், கோவிலாங்குளம் பகுதியில் 13 மில்லி மீட்டர் மழையும், அருப்புக்கோட்டை பகுதியில் 10 மில்லி மீட்டர் மழையும், சாத்தூரில் 8 மில்லி மீட்டர் மழையும், திருச்சுழியில் 9.50 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.
News November 20, 2024
விருதுநகரில் மழை தொடரும்!
விருதுநகர் உட்பட 13 மாவட்டங்களில் மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட கிழக்கு பருவமழை தொடங்கியது முதல் தென் மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. தொடர் மழையால் இன்று(நவ.,20) இதுவரை 5 மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் வெளியில் செல்லும் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் செல்ல அறிவுறுத்தப்படுகின்றனர்.
News November 20, 2024
விடுமுறை: பள்ளி தலைமை ஆசிரியர்கள் முடிவு செய்யலாம்!
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலை முதல் தொடர் மழை பெய்து வருவதால் பல்வேறு மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் ஆங்காங்கே பரவலாக மிதமான மழை பெய்துள்ளதால் இன்று(நவ.20) பள்ளிகளுக்கு விடுமுறை விடுவது குறித்து சூழலுக்கு ஏற்ப அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களே முடிவு எடுத்துக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.