News April 13, 2025

சட்டத்தை மீறியவர்களுக்கு பாடம்:  4 பேர் மீது  பாய்ந்தது வழக்கு!

image

கரூர் மாவட்டம் தோகைமலை அருகே ஆர்ச்சம்பட்டி கருப்ப நாயக்கன் குளம் அருகே அரசு அனுமதி இன்றி மண் அள்ளப்பட்டதாக ஆர்டிமலை கிராம நிர்வாக அலுவலர் ராமநாதன் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து அதே பகுதியைச் சேர்ந்த ராஜா, வெங்கடாசலம், சுப்பிரமணி, சுரேந்திரன் ஆகிய 4 பேர் மீது தோகைமலை போலீசார் நேற்று வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து உங்கள் கருத்து என்ன?

Similar News

News August 5, 2025

கரூர்: இளைஞர்களுக்கான அழகுக்கலை பயிற்சி

image

கரூர் மாவட்டத்தில் தாட்கோ (ம) ஒரு தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு 45 நாட்கள் அழகுக்கலை மற்றும் சிகை அலங்காரப் பயிற்சி வழங்குகின்றன. 8-12ம் வகுப்பு வரை கல்வியுடன், 18-35 வயதுக்குள் உள்ளவர்கள் <>www.tahdco.com<<>> முகவரியில் விண்ணப்பிக்கலாம். பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழுடன், ரூ.20,000 வரை சம்பளத்தில் வேலை வாய்ப்பு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 5, 2025

கரூர்: ராயனூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

image

கரூர் மாவட்டம் ராயனூர் பகுதியில் உள்ள R.R திருமண மண்டபத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதில் 46வது வார்டை சேர்ந்த பொதுமக்கள் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், பென்ஷன், பட்டா மாற்றம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட சேவைகளை பெற மாவட்ட நிர்வாகம் சார்பில் அழைக்கப்பட்டுள்ளது.

News August 4, 2025

கரூர்: கடவூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வாகன ஏலம்

image

கரூர் மாவட்டம் கடவூர் வட்டாட்சியர் அலுவகத்தில் பயன்படுத்தப்பட்ட வாகனத்திற்கான பொது ஏலம் (ஆகஸ்ட் 18) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. ஏலத்தில் பங்கேற்க விரும்பும்வர்கள், காலை 10 மணி முதல் 11 மணி வரை ரூ.2,000 முன் வைப்பு தொகை செலுத்தி பதிவு செய்யலாம். வெற்றி பெறுபவர்கள் ஏலத் தொகை மற்றும் 18% ஜிஎஸ்டி உடனடியாக செலுத்த வேண்டும். (ஆகஸ்ட் 10) அன்று வாகனங்களை பார்வையிடலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!