News April 5, 2025

சகல செளப்பாக்கியங்களை அருளும் தில்லை காளி

image

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள தில்லை காளி கோயில் 1000 ஆண்டுகள் பழமையானதாகும். பார்வதியின் மீது கோபமுற்ற சிவன் கோர முகம் கொண்ட காளியாக மாற சாபமிட்டார். பின்னர் இருவருக்கு நடந்த நடன போட்டியில் தோல்வியடந்த காளி இந்த தில்லை பகுதியை வந்தடைந்தார். முற்காலத்தில் போருக்கு செல்லும் வீரர்கள் காளியை வணங்கி விட்டு செல்வார்கள். தில்லை காளியை வணங்கினால் சகல செளபாக்கியமும் கிடைக்கும் எனக் கூறுகின்றனர்.

Similar News

News April 12, 2025

கடலூர்: சத்துணவு மையத்தில் வேலை

image

சத்துணவுத் திட்டத்தின் கீழ், கடலூர் மாவட்டத்தில் பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 320 சமையல் உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்படவுள்ளது. விருப்பமுள்ளவர்கள் https://cuddalore.nic.in/ என்ற இணைய தளம் வாயிலாக விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். மற்றவர்களுக்கு SHARE செய்து உதவுங்கள்.

News April 11, 2025

கடலூர்: 10 வட்டாட்சியர் அலுவலகங்களில் நாளை சிறப்பு முகாம்- ஆட்சியர்

image

கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், பண்ருட்டி, திட்டக்குடி, ஸ்ரீமுஷ்ணம், காட்டுமன்னார்கோயில், குறிஞ்சிப்பாடி, வேப்பூர், புவனகிரி ஆகிய 10 இடங்களில் வட்டாட்சியர் அலுவலகங்கள் செயல்படுகிறது. இந்த அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் நாளை (12/4/2025) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை பொது விநியோகத் திட்ட குறைதீர்வு முகாம் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

News April 11, 2025

குழந்தை பாக்கியம் அருளும் மேல்பட்டாம்பாக்கம் சுப்பிரமணியர்

image

மேல்பட்டாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. உற்சவத்தின் 9 நாட்களும் தினமும் மகா அபிஷேகம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் காட்சி தருகிறார். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் முருகனுக்கு தேன் அபிஷேகம் செய்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

error: Content is protected !!