News October 14, 2024

கோவை மாநகராட்சியில் கட்டுப்பாட்டு மைய எண் அறிவிப்பு

image

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு பேரிடர் காலங்களில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளும் வகையில் கோவை மாநகராட்சி அலுவலகத்தில் அவசர கால கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. அவசர கட்டுப்பாட்டு மைய எண் – 0422 – 2302323 என்ற எண்ணிலும், வாட்ஸ் அப் எண் – 81900 00200 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். மேலும், மண்டலம் வாரியாக தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டிய எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

Similar News

News November 20, 2024

ஆசிரியர் கொலை: அரசை சாடிய வானதி சீனிவாசன் 

image

கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் இன்று தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், திராவிட மாடல் அரசின் கீழ் தமிழகத்தின் பாதுகாப்பு நிலை குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார். அண்மையில் நடந்த ஆசிரியை கொலை சம்பவத்தை சுட்டிக்காட்டி, பெண்கள் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

News November 20, 2024

கோவையில் 65 பேர் மீது குண்டர் சட்டம் 

image

கோவை எஸ்பி கார்த்திகேயன் சார்பில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் இன்று மாலை வெளியிட்ட செய்தி குறிப்பில் “பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை தொடரும். இந்த ஆண்டில் இதுவரை 65 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

News November 20, 2024

துக்க வீட்டில் தீ: பலி 3 ஆக உயர்வு

image

கோவை: கணபதி பகுதியில் துக்க வீட்டில் தீப்பிடித்த சம்பவத்தில் பலி எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது. கோவையில் நவ.16ஆம் தேதி துக்க வீட்டில் நிகழ்ந்த தீ விபத்தில் ராமலட்சுமி, பானுமதி ஆகியோர் உயிரிழந்த நிலையில், சிகிச்சை பெற்று வந்த ராஜேஸ்வரன்(50) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.