News April 14, 2025
கோவை: திருட்டை தடுக்க இத பண்ணுங்க!

கோவையில் வெளியூர் செல்லும் பொதுமக்கள், தங்கள் வீடுகள் பூட்டப்பட்டிருந்தால், காவல் நிலையங்களில் தெரிவிக்கலாம். திருட்டை தடுக்க கூடுதல் கவனம் செலுத்தப்படும் என காவல் ஆணையர் உறுதி அளித்துள்ளார். பொதுமக்கள் தங்கள் முகவரி மற்றும் வீடு எத்தனை நாட்களுக்குப் பூட்டி இருக்கும் போன்ற தகவல்களை அருகில் உள்ள காவல் நிலையத்திலோ, 81900-00100 எண்ணிலோ தெரிவிக்கலாம் என காவல்துறை தெரிவித்துள்ளது. இதை SHARE பண்ணுங்க!
Similar News
News April 16, 2025
கோவை: ரூ.45,000 சம்பளத்தில் அரசு வேலை!

மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தில் கோவை மாவட்டத்தில் காலியாக உள்ள 1 குறைதீர்ப்பாளர் பணியிடத்திற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு சம்பளமாக மாதம் ரூ.45,000 வரை வழங்கப்படும். ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள், இங்கு <
News April 16, 2025
கோவை: சமையல் உதவியாளர் பணிக்கு அழைப்பு

கோவை மாவட்ட சமூக நலத்துறையின் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 331 சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு பெண்களை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியாகியுள்ளது.21 முதல் 40 வயதுக்குள் உள்ள பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் ஏப்ரல் 28க்குள் சமர்ப்பிக்க வேண்டும். தகுதியுடைய பெண்கள் தகுந்த சான்றிதழ்களுடன் அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேரில் சென்று விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News April 16, 2025
கோவையில் குண்டர் சட்டத்தில் 61 பேர் கைது

கோவை மாநகர போலீசார் கடந்த நான்கு மாதங்களில் மேற்கொண்ட நடவடிக்கைகளில் ரவுடிகள், பாலியல் குற்றவாளிகள், போதைப் பொருள் விற்பனையாளர்கள் என மொத்தம் 61 பேரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். மேலும், குற்றச் சம்பவங்களில் ஈடுபடுபவர்களை கட்டுப்படுத்தவும், மாநகரில் குற்றங்களை குறைக்கவும் 51-ஏ சட்டத்தின் கீழ் குற்றவாளிகள் கண்காணிக்கப்பட்டு வருவதாக நேற்று காவல் ஆணையர் தெரிவித்தார்.