News March 22, 2025
கோவை: எஸ்.பி கார்த்திகேயன் கடும் எச்சரிக்கை

கோவை எஸ்.பி கார்த்திகேயன் இன்று விடுத்த செய்தி குறிப்பில், சட்டத்திற்கு புறம்பாக குற்ற செயல்களில் யாரேனும் ஈடுபட்டால், சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். குற்றங்களை தடுத்திட பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம். தயங்காமல் அழைத்திடுங்கள். கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212, வாட்சப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என அதில் அறிவுறுத்தியுள்ளார்.
Similar News
News March 23, 2025
JOB: சூலூர் விமானப்படை பள்ளியில் வேலை

சூலூர் விமானப்படை பள்ளியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இங்கு இயற்பியல், ஆங்கிலம், சமூக அறிவியல், கணக்கியல் ஆசிரியர் மற்றும் உதவியாளர் பணியிடங்கள் காலியாகவுள்ளன. இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள்<
News March 22, 2025
துணை முதல்வர் கோவை பயணம் ஒத்திவைப்பு

கோவை மாவட்டத்தில் நாளை (23-03-2025) துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருந்த நிலையில், தற்பொழுது தவிர்க்க இயலாத காரணங்களால், இந்த சுற்றுப்பயணம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒத்திவைக்கப்பட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும் தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News March 22, 2025
கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (22.03.2025) இரவு ரோந்து பணிக்கு, காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.