News March 24, 2025

கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில் இன்று (23.03.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

Similar News

News March 26, 2025

கோவை: 210 காட்டு யானைகள் உயிரிழப்பு

image

கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய வனப்பகுதியில், காட்டு யானை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. இதனிடையே மனித – யானை மோதல் குறித்த விபரங்களை ஆசிய யானைகள் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மோதல் மேலாண்மை மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி வனக்கோட்டத்தில் கடந்த 2010 முதல் 2024 வரையிலான கடந்த 15 ஆண்டுகளில், பல்வேறு காரணங்களால், 210 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 26, 2025

கோவை: தர்பூசணி சாப்பிடுவோர் கவனத்திற்கு!

image

கோவையில் விற்பனையாகும் தர்பூசணி பழங்களில், செயற்கை நிறமூட்டி சேர்க்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக புகார் வருவதால், தர்பூசணியை பார்த்து வாங்க வேண்டும். நிறமூட்டி சேர்க்கப்பட்டுள்ளதா என கண்டறிய, வெட்டிய தர்பூசணியில் டிஸ்யூ பேப்பரை வைத்து தேய்க்க வேண்டும். நிறமூட்டி சேர்க்கப்பட்டால், அது பேப்பரில் ஒட்டிக்கொள்ளுமாம். இது குறித்து 9444042322 என்ற எண்ணுக்கு புகார் அளிக்கலாம். இதை SHARE செய்யுங்கள்.

News March 26, 2025

அக்னிவீர் ஆட்சேர்ப்பு பதிவு தொடக்கம்

image

கோவை ராணுவ ஆள்சேர்ப்பு அலுவலர் கர்னல் அன்சூல் வர்மா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அக்னிவீர் ஆட்சேர்ப்புக்கான தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன. கோவை, திருப்பூர், சேலம், ஈரோடு, திண்டுக்கல், நாமக்கல், நீலகிரி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் www.joinindianarmy.nic.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் என்றார். உடனே SHARE பண்ணுங்க

error: Content is protected !!