News April 5, 2025
கோவில் அருகே சட்டவிரோத பட்டாசு தயாரிப்பு

சிவகாசி அருகே நாரணாபுரம் பகுதியில் நேற்று (ஏப்ரல்-04) போலீசார் சட்டவிரோத பட்டாசு தயாரிப்பு குறித்து சோதனை நடத்தினர். அப்போது தவ முனிஸ்வரர் கோயில் அருகே சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பது தெரியவந்தது. இதையடுத்து பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்ட தங்கேஸ்வரன் (29), தங்கப்பாண்டி (30) ஆகிய இருவரை சிவகாசி கிழக்கு போலீசார் கைது செய்து அங்கிருந்த சுமார் 10,000 ரூபாய் மதிப்பிலான பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.
Similar News
News April 6, 2025
முன்னோர்கள் சாபம் தீர்க்கும் பூமிநாதர் கோயில்

திருச்சுழி பகுதியில் உள்ள பாண்டியர் காலத்துப் பூமிநாதர் கோயில், முன்னோர்களின் சாபம் தீர்க்கும் தலமாக நம்பப்படுகிறது. இதை மையப்படுத்தி திருச்சுழியை சுற்றி 8 இடங்களில் அஷ்ட லிங்கங்கள் உள்ளன. இங்குள்ள மூலவர் கல்யாண கோலத்தில் உள்ளதால் இங்கு வந்து வழிபட்டால் திருமண தடை நீங்கும் என்பது நம்பிக்கை. மேலும் இங்கு மோட்ச தீபம் ஏற்றினால் முன்னோர்கள் சாபம் நீங்கும் என்று நம்பப்படுகிறது. SHARE பண்ணுங்க.
News April 6, 2025
சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய திருவேங்கடமுடையான்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு சொந்தமான நாடக சாலை தெருவில் உள்ள திருவேங்கடமுடையான் சன்னதியில் பங்குனி மாத சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி, சமேத திருவேங்கடமுடையான் சர்வ அலங்காரத்தில் எழுத்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
News April 6, 2025
பக்தர்களுக்கு காவல்துறை வேண்டுகோள்

சிவகாசியில் ஸ்ரீ மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவை முன்னிட்டு கோவில் வளாகம் மற்றும் முக்கிய பஜார் வீதிகளில் பக்தர்கள் பல்லாயிரக்கணக்கானோர் வருகை தருகின்றனர். இந்நிலையில் மக்கள் கூட்டத்தை பயன்படுத்தி வழிப்பறி கொள்ளையர்கள் உலாவர வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் தங்களது தங்க நகைகள் உள்ளிட்ட உடைமைகளை பத்திரமாக பாதுகாத்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.