News January 10, 2025
கோட்டைப்பட்டினம் அருகே 300 கிலோ கஞ்சா பறிமுதல்
கோட்டைப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் லாரியில் கடத்தி வரப்பட்ட 300 கிலோ கஞ்சா பிடிபட்டது. காரைக்கால் இருந்து தூத்துக்குடிக்கு கண்டெய்னர் லாரியில் கடத்திடப்பட்ட 300 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காவல்துறை விசாரணை முடிந்த பின்பு முழுமையான விவரம் தெரிய வரும்.
Similar News
News January 10, 2025
விருதுபெற விண்ணப்பிக்கலாம்- கலெக்டர் அறிவிப்பு
புதுகை மாவட்ட திருநங்கைகளுக்கு சொந்த முயற்சியில் படித்து தனித்திறமைகளை வளர்த்துக் கொண்டு பல்வேறு துறைகளில் முன்னேறி சாதனை படைத்த திருநங்கைகளை கௌரவப்படுத்தும் வகையில் 2025ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் தேதி திருநங்கையர் தினத்தன்று முன்மாதிரி விருது (1லட்சம் ரூபாய்) வழங்கப்படுகிறது. அதன்படி சாதனை புரிந்தவர்கள் https://awards.tn.gov.in ஜன.31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க ஆட்சியர் அருணா கேட்டுக் கொண்டுள்ளார்.
News January 10, 2025
EX.அமைச்சர் மீதான சொத்து குவிப்பு வழக்கு ஒத்திவைப்பு
அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வருமானத்திற்கு அதிகமான சொத்துகளை சேர்த்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வரும் நிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. ஆனால் விஜயபாஸ்கர் ஆஜராகவில்லை, வழக்கு நடைபெற்று வரும் மாவட்ட சார்பு நீதிமன்ற நீதிபதி விடுமுறை சென்றுள்ளதால் வரும் 24ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
News January 9, 2025
புதுகை ஆட்சியர் முக்கிய அறிவிப்பு
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி வட்டம் மும்பாலை கிராமத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமிற்கு மாவட்ட ஆட்சியர் மு.அருணா தலைமை வகித்து பேசும்போது ‘பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்களின் நிலவரம் குறித்து கண்காணிப்பதற்காக மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் நியமிக்கப்பட்டு அவ்வப்போது கண்காணிக்கப்பட்டு வருவதாக’ மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்தார்.