News March 17, 2025
கொலை வழக்கில் தேடப்பட்ட வாலிபர் கைது

தொண்டி அருகே நம்புதாளையில் ராட்டினம் அமைத்த பகுதியில் கடந்தாண்டு நவ.1 அன்று பட்டப்பகலில் திருமணத்தை மீறிய உறவு காரணமாக சரவணன் உள்ளிட்டோர் கார் மற்றும் டூவீலர்களில் சென்று முத்துக்குமாரை அரிவாளால் வெட்டி கொலை செய்தனர். இதில் சிவகங்கை மாவட்டம் ஒக்கூரை சேர்ந்த கலைசெல்வனை போலீசார் தீவிரமாக தேடிவந்தனர். இந்நிலையில் சென்னை பல்லாவரத்தில் இருந்த அவரை நேற்று தொண்டி போலீசார் கைது செய்தனர்.
Similar News
News March 18, 2025
ராமநாதபுர மாவட்டத்தில் இரவு ரோந்து செல்லும் காவல்துறை

இன்று (மார்ச்.17) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப் பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.
News March 17, 2025
நூற்றாண்டு கடந்த பாம்பன் கலங்கரை விளக்கம்

பாம்பனில் 1846ம் ஆண்டு ஐரோப்பியர்களால் 100 அடி உயர நேவல் கலங்கரை விளக்கம் அமைக்கப்பட்டது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை சம்பவத்திற்கு பிறகு கலங்கரை விளக்கத்திற்கு தடை விதிக்கப்பட்டது. 33 ஆண்டுகளுக்கு பின் கடந்தாண்டு மீண்டும் பொதுபயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. ரூ.10 கட்டணத்தில் பூங்காவுடன் இயங்கும் நேவல் கலங்கரை விளக்கம் குழந்தைகளுடன் பொழுதினை கழிக்க ஏற்ற இடமாக அமையும். *ஷேர் பண்ணுங்க
News March 17, 2025
ராமநாதபுரம் காவல்துறை ரோந்து பணி விவரம்

இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று(மார்ச்.17) நண்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை நண்பகல் ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல்துறை அதிகாரிகளின் பெயர் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் உள்ள அட்டவணை இராமநாதபுரம் காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. காவல்துறை உதவி தேவைப்பட்டால் தொடர்பு கொள்ளலாம் என தனது X வலைதளப் பக்கத்தில் அறிவித்துள்ளது.