News March 11, 2025

கொலை வழக்கில் தேடப்பட்ட முக்கிய குற்றவாளி சரண்

image

நாகர்கோவிலில் மளிகை கடை வியாபாரி வேலுவை கல்லால் தாக்கி, எரித்துக் கொன்ற வழக்கில் முக்கிய குற்றவாளியான தோவாளை திருமலாபுரம் பகுதி சேர்ந்த சிவனேஷ் -ஐ போலீசார் தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் தனிப்படை அமைத்து குற்றவாளியை தேடி வந்தனர். ஆனால் குற்றவாளி எங்கு தலைமறைவாகி இருக்கிறார் என தெரியாமல் இருந்து வந்த நிலையில், நேற்று நாகர்கோவில் ஜே.எம் கோர்ட்டில் நீதிபதி முன்பு சரணடைந்தார்.

Similar News

News March 12, 2025

கன்னியாகுமரி மாவட்ட இன்றைய முக்கிய நிகழ்வுகள்

image

#இன்று(மார்ச் 12) காலை 10 மணிக்கு அரசின் சலுகைகளை ஊராட்சி செயலர்களுக்கு விரிவுபடுத்தி அரசாணை வழங்க கேட்டு நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.#காலை 10 மணிக்கு ஓய்வூதியர்களின் 9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வேப்பமூடு பூங்கா முன்பு ஓய்வுபெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

News March 12, 2025

குமரி மாவட்டத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு

image

தூத்துக்குடி, குமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் இன்றும்(மார்ச் 12) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. நேற்றும் இம்மாவட்டங்களில் மழை பெய்தது குறிப்பிடத்தக்கது. SHARE IT.

News March 11, 2025

குமரியில் அடுத்த 3 மணி நேரத்தில் கொட்டி தீர்க்கும் மழை

image

பூமத்திய ரேகையை ஒட்டிய வடகிழக்கு இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று பல்வேறு பகுதியில் மழை பெய்து வருகிறது, இந்நிலையில் இன்று இரவு 10 மணி வரை குமரி மாவட்டத்தில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்தால் கமெண்ட் செய்யவும்.

error: Content is protected !!