News March 29, 2024
கொடைக்கானல் தேவாலயங்களில் பாதம் கழுவும் திருச்சடங்கு

கொடைக்கானல் தேவாலயங்களில் பாதம் கழுவும் திருச்சடங்கு நேற்று மாலை நடைபெற்றது. கொடைக்கானல் மூஞ்சிக்கல் திரு இருதய ஆண்டவா் ஆலயத்தில் மறைவட்டார அதிபா் சிலுவை மைக்கேல்ராஜ் தலைமையிலும், செண்பகனூா் புனித சவேரியாா் ஆலயத்தில் பங்குத் தந்தை அப்போலின் கிளாட்ராஜ் தலைமையிலும் பாதம் கழுவும் திருச்சடங்கு சிறப்புத் திருப்பலியுடன் நடைபெற்றது.
Similar News
News April 20, 2025
திண்டுக்கல் இன்றைய இரவு நேர ரோந்து காவலர்கள்

திண்டுக்கல்லில் இன்று 20-04-2025 இரவு 11.00 மணி முதல் நாளை திங்கட்கிழமை காலை 6.00 மணி வரை காவல் துறையினர் நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல், வேடசந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தெரிவித்துள்ளது…
News April 20, 2025
காதலியை ஏமாற்றிய இளைஞர் கைது!

பழனியைச் சேர்ந்த விவேக் (29) என்பவர் திருப்பூர் பின்னலாடை நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அப்போது 23 வயது பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் நெருக்கமாக பழகி வந்த நிலையில் அந்தப் பெண் கர்ப்பமானர். இந்தநிலையில் விவேக் அப்பெண்ணை விட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் விவேக்கை திருப்பூர் போலீசார் இரண்டு பிரிவுகளின் கீழ் கைது செய்தனர்.
News April 20, 2025
விளையாட்டு விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விளையாட்டு விடுதியில் சேர விருப்பமுள்ள 7, 8, 9, 11-ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகள் இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பத்தை மே 5-ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும். இதுதொடர்பான கூடுதல் தகவல்களுக்கு ஆடுகள தகவல் தொடர்பு மையத்தை 9514000777 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.