News April 19, 2024
கோவை: புது மாப்பிள்ளை தற்கொலை

கோவை குனியமுத்தூரரை சேர்ந்தவர் முருகானந்தம்(28). இவரது மனைவி ரோஹினி(26). இவர்களுக்கு கடந்த 11ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணம் ஆன நாள் முதல் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று முருகானந்தம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போத்தனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News April 20, 2025
கோவையில் யானை தாக்கி முதியவர் பலி!

கோவை, காளம்பாளையம், தாயனூர் தெற்கு தோட்டம் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி(60). இவர் சொந்தமாக ஆடுகளை வைத்து வளர்த்து வருகிறார். நேற்று ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்று விட்டு, பின் மாலை மீண்டும் வீடு திரும்பியுள்ளார். அப்போது, புதர் மறைவில் மறைந்திருந்த குட்டியுடன் கூடிய ஒற்றை காட்டு யானை தாக்கியதில் அவர் பலியானார். இச்சம்பவம் குறித்து காரமடை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
News April 20, 2025
கோவை: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (19.4.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News April 19, 2025
சொந்த வீடு யோகம் தருவார் பதிமலை பாலமுருகன்!

பலரும் அறிந்திடாத ஓர் அற்புதமான மலைக்கோயில்தான் பதிமலை பாலமுருகன் கோயில். இக்கோயில் கோவை, ஒத்தக்கால் மண்டபம் பிச்சனூர் அருகே அமைந்துள்ளது. கல்யாண வரம், குழந்தை வரம் வேண்டும் பக்தர்கள், இங்கு மனமுருக வேண்டினால் விரைவில் பலிக்குமென்பது ஐதீகம். செங்கற்களை அடுக்கிவைத்து வேண்டினால், விரைவில் சொந்த வீடு வாங்கும் யோகம் அமையும் என்பது நம்பிக்கை. சொந்த வீடு கனவு காணும் உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!