News August 16, 2024
கே.சி பழனிச்சாமி மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு ரத்து

கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பின் அதிமுக பெயரில் இணைதளம் தொடங்கி மோசடி செய்ததாக அதிமுக அளித்த புகாரில் சூலுர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டது. இதனை ரத்து செய்ய கோரி கே.சி பழனிச்சாமி வழக்கு தொடர்ந்திருந்தார். அதிமுகவின் புகாரில் இந்திய தேசிய இணைய பரிவர்த்தனை நடுவம் கே.சி.பழனிச்சாமி மீது நடவடிக்கை எடுத்துவிட்டதால் அவர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
Similar News
News August 9, 2025
ரூ.1 லட்சம் மானியத்துடன் ஆட்டோ வழங்கிய Dy CM

ராயப்பேட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 100 பெண்கள் மற்றும் திருநங்கை ஓட்டுநர்களுக்கு தலா ரூ.1 லட்சம் மானியத்துடன் புதிய ஆட்டோ வாகனங்களை Dy CM உதயநிதி ஸ்டாலின் வழங்கி கொடியசைத்து துவக்கி வைத்தார். பின் பேசிய அவர், இந்தியாவிலேயே மகளிர் மற்றும் திருநங்கையர்களுக்கு ஆட்டோ ஓட்டுநர்களாக பயிற்சி கொடுத்து நலவாரியத்தில் உறுப்பினர்களாக சேர்த்து, மானியத்துடன் ஆட்டோ வழங்கு ஒரே மாநிலம் தமிழ்நாடு என்றார்.
News August 8, 2025
100 மகளிருக்கு தலா ரூ.1 லட்சம் மாணியம்

சென்னை ராயப்பேட்டையில் இன்று (08.08.2025) 100 மகளிர்களுக்கு புதிய ஆட்டோக்களை வாங்குவதற்காக தலா ரூ.1 லட்சம் மானியத்தொகையை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். இது அனைத்து மகளிர் ஆட்டோ ஓட்டுனர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிகழ்வின் போது அரசு அதிகாரிகள் உட்பட பலர் உடன் இருந்தனர்.
News August 8, 2025
அரசு பள்ளி கட்டிடத்தை திறந்து வைத்த அமைச்சர்கள்

பாலவாக்கம் அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளியில் புதிதாக கூடுதல் கட்டிடத்தை அமைச்சர் மா.சுபிரமணியன் மற்றும் அமைச்சர் மதிவேந்தன் ஆகியோர்கள் திறந்து வைத்தனர். இந்நிகழ்வின் போது சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த்ரமேஷ், துறையின் செயலாளர்கள் மற்றும் அரசு அலுவலர்களுக்கு பங்கேற்றனர்.