News April 14, 2024
கெங்கை அம்மன் கோயில் பால்குடம் ஏந்தும் நிகழ்ச்சி

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இன்று காலை 9.30 மணியளவில் வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள பிரசித்தி பெற்ற சாலை கெங்கை அம்மன் கோவில் நிர்வாகிகள் மற்றும் இளைஞர்கள் சார்பில் பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி விமர்சையாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 19 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட ஊர் பொதுமக்கள் , ஆண்கள் , பெண்கள் பலர் திரளாக கலந்து கொண்டனர் அம்மன் அருளை பெற்றனர்.
Similar News
News August 9, 2025
வேலூர் ரேஷன் கார்டு திருத்த சிறப்பு முகாம் கலெக்டர் தகவல்

வேலூர் மாவட்டத்தில் ரேஷன் கார்டு திருத்த சிறப்பு முகாம் நாளை ஆகஸ்ட் 9-ம் தேதி நடைபெற உள்ளது. அதன் விவரம் .
1.வேலூர்- மேல் வல்லம் கிராமம்
2.அணைக்கட்டு- கீழாச்சூர், வெப்பந்தல்
3.காட்பாடி- உள்ளி புத்தூர்
4.குடியாத்தம்- ராமாலை, காந்தி கணவாய்
5.கே.வி.குப்பம்-காலாம்பட்டு
6.பேரணாம்பட்டு- பரவக்கல்
எனவே பொதுமக்கள் இந்த முகாமை பயன்படுத்தி கொள்ளுமாறு கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.
News August 9, 2025
வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை

வேலூர் மாவட்டம் முழுவதும் இன்று (ஆகஸ்ட்-8) காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் நடத்திய சோதனையில், 45 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு 2 பேர் மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இது போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் எச்சரித்துள்ளார்.
News August 9, 2025
பள்ளி மாணவிக்கு 10 ஆயிரம் நிதி வழங்கிய கலெக்டர்

தாய்லாந்தில் நடைபெற உள்ள சர்வதேச இளைஞர் மன்றம் 5.0 நிகழ்வில் தமிழ்நாட்டு மாணவர்களின் சார்பில் கலந்து கொள்ள தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள லத்தேரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி நிஷாந்தினிக்கு மாவட்ட ஆட்சியரின் விருப்ப நிதியிலிருந்து ரூ.10,000/-க்கான காசோலையை இன்று வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி வழங்கினார்.