News January 23, 2025
குவாரி உரிமையாளர் காவல் நிலையத்தில் சரண்

புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் சமூக ஆர்வலர் ஜகுபர் அலி லாரி ஏற்றி கொல்லப்பட்ட வழக்கில் தலைமறைவாகியிருந்த குவாரி உரிமையாளர் ராமையா புதுக்கோட்டை நமனமுத்திரம் காவல் நிலையத்தில் சரணடைந்தார். திருமயத்தில் சட்ட விரோதமாக கல்குவாரிகள் இயங்குவதாக தொடர்ந்து புகார் அளித்த ஜகுபர் அலியை லாரி ஏற்றி கொன்ற வழக்கில் தலைமறைவாக இருந்த குவாரி உரிமையாளர் ராமையா இன்று காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
Similar News
News April 21, 2025
அரசடிப்பட்டியில் ஜல்லிக்கட்டில் 40 பேர் காயம்

ஆலங்குடி அருகே உள்ள அரசடிப்பட்டி மயில்வாகனன் கோயில் திருவிழாவையொட்டி, நேற்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியின் போது சீறிப்பாய்ந்த காளைகள் தாக்கியதால் மாடுபிடி வீரர்கள், காவலா், பார்வையாளர்கள் உள்ளிட்ட 40 பேர் காயமடைந்தனர். மருத்துவக் குழுவினர் உடனடியாக அவர்களுக்கு சிகிச்சை அளித்தனர். இருப்பினும் 8 பேர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
News April 21, 2025
மீமிசல் அருகே குட்கா விற்றவர் கைது

மீமிசல் கிழக்கு கடற்கரை சாலையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்வதாக கோட்டைப்பட்டினம் துணை கண்காணிப்பாளர் காயத்ரி அவர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அங்குவிரைந்த தனிப்படை காவலர்கள் அருண்குமார் (25) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்த 555 பாக்கெட்டுகள் பறிமுதல் செய்தனர். அவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
News April 20, 2025
புதுக்கோட்டை இரவு நேர ரோந்து காவல் பணி விபரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள். புதுக்கோட்டை மாவட்டத்தில் இரவு நேரத்தில் ஏதேனும் அசம்பாவிதம் நடைபெற்றால் இந்த எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.