News March 26, 2024

குமரியில் மோட்டார் சைக்கிள் பேரணி

image

கன்னியாகுமரி மாவட்டம் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர், இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலுக்கிணங்க ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பாபு அவர்கள் தலைமையில் அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியம் சார்பாக 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்த மோட்டார் சைக்கிள் பேரணி நடைபெற்றது. இதில் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News

News April 4, 2025

குமரியில் 3 நாள் போக்குவரத்து மாற்றம்

image

நாகர்கோவில் பார்வதிபுரம் மேம்பாலத்தின் கீழ் உள்ள சாலையில் தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்திற்கு சொந்தமான உயர் அழுத்த புதைவடம் பழுதை சரி செய்யும் பணி நடைபெற இருப்பதால் நாளை(ஏப்ரல்.5 முதல் 7ஆம்)தேதி வரையிலும் பார்வதிபுரத்தில் இருந்து நாகர்கோவில் செல்லும் வாகனங்கள் மேம்பாலத்தின் வழியாக மாற்றுப்பாதையில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது என நாகர்கோவில் மின் விநியோக செயற்பொறியாளர் கூறியுள்ளார்.ஷேர் செய்யவும்.

News April 4, 2025

குமரியில் ரூ.15,000 சம்பளத்தில் வேலை

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தனியார் உற்பத்தி நிறுவனத்தில் 20க்கும் மேற்பட்ட இயந்திர ஆப்ரேட்டர் காலிபணியிடங்கள் உள்ளது. இந்த பணிக்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 வயது முதல் 40 வயது வரை உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக ரூ.15ஆயிரம் வரை வழங்கப்படும். முன் அனுபவம் தேவையில்லை. <>இங்கு <<>>கிளிக் செய்து 25-04-2025க்குள் விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் நபர்களுக்கு ஷேர் செய்யுங்கள்

News April 4, 2025

கேரளா கார் மோதி பெரும் விபத்து

image

நாகர்கோவில் கிருஷ்ணன்கோவில் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மீது, மது போதைகள் ஒட்டி வரப்பட்ட கேரளப்பதிவு எண் கொண்ட கார் மோதி பெரும் விபத்து. விபத்து ஏற்படுத்திய கேரளா பதிவு எண் கொண்ட காரின் ஓட்டுனர் மற்றும் அவரது நண்பர்கள் அனைவரும் அதிகம் மது அருந்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்து சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

error: Content is protected !!