News March 10, 2025
குமரியில் மிககனமழை எச்சரிக்கை

குமரி மாவட்டத்தில் நாளை கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை கருத்தில் கொண்டு உயிர் சேதம், பொருள் சேதம் ஏற்படாத வண்ணம், மின்சாதனங்களை கவனமுடன் கையாளவும், மேலும் மழை நேரங்களில் மரங்கள், மின்கம்பங்கள், நீர்நிலைகள் அருகில் செல்ல வேண்டாம் எனவும், மீனவர்கள் மீன்பிடி தொழிலுக்கு செல்ல வேண்டாம் எனவும் மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.* நண்பர்களை உஷார் படுத்தவும்*
Similar News
News March 11, 2025
குமரியில் விமான நிலையம் வேண்டும்: எம்பி கோரிக்கை

குமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் இன்று பாராளுமன்றத்தில் நிகழ்த்திய உரையில், “குமரியை உலக தரம் வாய்ந்த சுற்றுலா மையம் மையமாக்குவதற்கு ஒரு விமான நிலையம் தேவை; இதனால் தமிழ்நாட்டு சுற்றுலாவும் இந்திய பொருளாதாரமும் வளர்ச்சி அடையும்” என தெரிவித்துள்ளார். விமான நிலையம் அமைவதால் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு பெருகும் எனவும் தெரிவித்துள்ளார்.
News March 10, 2025
குமரி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை

குமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற மண்டைக்காடு அருள்மிகு பகவதி அம்மன் மாசி கொடை திருவிழா மார்ச் 2 முதல் நாளை வரை நடை பெறுகிறது. இதை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் அனைத்து பள்ளிகள் கல்லூரிகள் மற்றும் அரசு நிறுவனங்களுக்கு நாளை(மார்ச்11) ஒரு நாள் உள்ளூர் விடுமுறை வழங்கப்படுகிறது என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.*தெரியாதவர்களுக்கு பகிர்ந்து தெரியப்படுத்தவும்*
News March 10, 2025
குமரி மாவட்ட மக்கள் குறைத்தீர் கூட்டம் நிறைவு

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று பொது மக்களின் குறைகளை கேட்டறிந்தார். அப்போது பொதுமக்கள் சார்பில் வீட்டுமனை பட்டா, கடன் உதவி, பட்டா பெயர் மாற்றம் உள்ளிட்ட மனுக்கள் கொடுக்கப்பட்டது. மொத்தம் 575 மக்கள் பொதுமக்கள் சார்பில் கொடுக்கப்பட்ட நிலையில், அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவிட்டார்.