News April 28, 2024

குமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

image

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் பள்ளிகளுக்கு பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் இன்று சுற்றுலா பயணிகளின் கூட்டம் இன்று காலை முதலே வரத் தொடங்கியுள்ளனர். சூரிய உதயத்தை கண்டு ரசித்தனர். பின்னர் விவேகானந்தர் நினைவு மணிமண்டபத்திற்கு சுற்றுலா படகில் சென்றும் கடலில் குளித்தும் மகிழ்ந்தனர். உள்ளூர் மட்டுமின்றி வெளி மாநிலங்களிலிருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர்.

Similar News

News November 20, 2024

எழும்பூர் to நாகர்கோவில் ரயில் தாம்பரத்திலிருந்து..!

image

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை(நவ.,21) முதல் மறு அறிவிப்பு வரும் வரை நாகர்கோவில் to எழும்பூர் வாராந்திர அதிவிரைவு ரயில் இரு மார்க்கங்களிலும் எழும்பூருக்கு பதிலாக, தாம்பரத்திலிருந்து இயங்கும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. இந்த ரயில் இரவு 7.30 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும், மறு மார்க்கத்தில் 22ஆம் தேதி மாலை 4:15 மணிக்கு புறப்படும். SHARE IT.

News November 20, 2024

கன்னியாகுமரி மாவட்ட இன்றைய முக்கிய நிகழ்வுகள்

image

#காலை 10 மணிக்கு கோழிவிளை சந்தியில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்வதாக கூறியும், இதுவரை நடவடிக்கை எடுக்காததால் காங்கிரஸ் எம்பி, எம்எல்ஏக்களை கண்டித்தும் தொடர் உண்ணாவிரதம். #குமரி மாவட்டத்தில் கடலோரப் பகுதிகளில் ஆபரேஷன் சி விஜி இன்றும் நாளையும்( 20, 21) ஒத்திகை நிகழ்ச்சி நடைபெறுகிறது. #உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் திருவட்டார் தாலுகாவில் ஆட்சியர் ஆய்வு.

News November 20, 2024

குமரியில் மழை தொடரும்: வானிலை ஆய்வு மையம்

image

குமரி உட்பட 13 மாவட்டங்களில் மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட கிழக்கு பருவமழை தொடங்கியது முதல் தென் மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. தொடர் மழையால் இன்று(நவ.,20) இதுவரை 3 மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் வெளியில் செல்லும் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் செல்ல அறிவுறுத்தப்படுகின்றனர்.