News November 18, 2024

குமரியில் 442 மனுக்கள் பெறப்பட்டன

image

குமரி ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் அழகு மீனா தலைமையில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில், கல்வி உதவித்தொகை, பட்டா பெயர் மாற்றம், மாற்றுத்திறனாளி நல உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் கோரி 442 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டதாக ஆட்சியர் அலுவலகம் தகவல் அளித்தது.

Similar News

News November 19, 2024

குமரி அணைகளில் இன்றைய நீர் இருப்பு விவரம்

image

குமரி மாவட்டத்தில் உள்ள அணைகளில் இன்றைய நீர் இருப்பு விவரம்: 18 கொள்ளளவு கொண்ட சிற்றார் 1,2 அணைகளில் முறையே 14 மற்றும் 14.86 அடி 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறையில் 42.24 அடி நீரும்,77அடி நீரும், 77 அடி கொண்ட பெருஞ்சாணியில் 64.68 அடி நீரும், 25 அடி கொள்ளளவு கொண்ட முக்டல் அணையில் 25 அடி நீரும், 42.65அடி 42.65 அடி கொண்ட பொய்கையில் 15.1 அடி நீரும் இருப்பு உள்ளது.

News November 19, 2024

‘போலீஸ் அக்கா’ திட்டத்தில் 113 பெண் போலீசார் நியமனம்

image

போலீஸ் அக்கா திட்டத்தின் கீழ் பெண் போலீசார் அந்த பகுதி கல்வி நிறுவங்களுடன் தொடர்பு அலுவலராக இருப்பார். இவர்கள் மாணவிகளுடன் தோழியைப்போல பழகுவர். வீட்டில், பள்ளியில் பகிர்ந்துகொள்ள இயலாத பிரச்னைகளை இவர்களிடம் தெரிவித்தால் தீர்வு காண்பர். நம் மாவட்டத்தில் ‘போலீஸ் அக்கா’ திட்டத்தில் 113 பெண் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளதாக நேற்று(நவ.,18) நாகர்கோவிலில் நடந்த விழாவில் SP சுந்தரவதனம் தெரிவித்துள்ளார்.

News November 19, 2024

குமரி: 74 பேர் கைது! 127 டன் அரிசி பறிமுதல்

image

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் இருந்து குமரி வழியாக ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க உணவு கடத்தல் தடுப்பு பிரிவு நெல்லை சரக டி.எஸ்.பி. மேற்பார்வையில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபடுகின்றனர். மாவட்டம் முழுவதும் இந்த ஆண்டு இதுவரை போலீசாரின் சோதனையில் 127 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டதோடு, ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட 74 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என போலீசார் நேற்று கூறினர்.