News April 6, 2025
குமரியில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை

கன்னியாகுமரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் டெலிகாலர் பிரிவில் 20 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளனர். இதில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 19 – 59 வயதிற்குட்பட்டவர்கள் மே.31 க்குள் விண்ணப்பிக்கலாம். மாதம் ஊதியமாக ரூ.15,000 வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்புவர்கள் இங்கே <
Similar News
News April 11, 2025
குமரியில் 20,000 அரசு ஊழியர்களுக்கு ரூ.85 கோடி சம்பளம்

குமரி மாவட்டத்தில் பணியாற்றும் 20,000 அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.85 கோடி சம்பளம் வழங்கப்படுவதாக கருவூலத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த நிதி ஆண்டில் மாதம் ஒன்றுக்கு ரூ.85.41 கோடி சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாகவும், ஆண்டு ஒன்றுக்கு 1025.3 கோடி சம்பளம் வழங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News April 10, 2025
குமரியில் கண்பார்வை குறைபாடு தீர்க்கும் கோயில்

சுசீந்திரம் அருகே ஆஸ்ராமத்தில் கண்பார்வை குறைபாடு நீக்கும் கண்டன் சாஸ்தா கோவில் அமைந்துள்ளது.முன்னொரு காலத்தில் கண் தெரியாத பக்தர் ஒருவர் கோயில் வாசலில் படுத்திருந்தார். சாஸ்தாவை மனக்கண்ணால் வழிபட யாரோ ஒருவர் அவர் கண்ணில் மையை தடவியுள்ளார். பின்னர் அவருக்கு பார்வையும் வந்துள்ளது. கண்ணில் மையால் எழுதி பார்வை கொடுத்ததால் இவர் “அஞ்சனம் எழுதிய கண்டன் சாஸ்தா’ என்று பெயருடன் அழைக்கப்படுகிறார்.
News April 10, 2025
கன்னியாகுமரி: அக்னிவீர் திட்டத்தில் ஆட்சேர்ப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் 2025-26 ஆம் ஆண்டு அக்னி வீர் திட்டத்தின் கீழ் 10,12 ஆம் வகுப்பு படித்த இளைஞர்களுக்கு பொதுப்பணி, டெக்னிக்கல், கிளார்க், டிரேட்ஸ்மென் பிரிவுகளில் ஆட்சேர்ப்பு நடைபெறவுள்ளது. இதில் விண்ணப்பிக்க இன்றே(ஏப்.10) கடைசி நாள். விண்ணப்பிக்க விரும்புவர்கள் இங்கே<